4- அந்நிஸா



அதிகாரம் : அந்நிஸா
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள் : 177
பிரிவுகள் : 24
  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமான அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. மக்களே! உங்களை ஓர் உயிரிலிருந்து படைத்து அ(தன் இனத்)திலிருந்தே அதன் இணையையும் படைத்து அவ்விரண்டிலிருந்தும், அநேக ஆண்களையும் பெண்களையும் (படைத்து உலகில்) பரவச் செய்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அவன் பெயரால் (உங்கள் தேவைகளைக்) கேட்கின்றீர்கள்.1 அத்தகைய அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். குறிப்பாக இரத்த உறவுகளி(ன் தொடர்பி)லும் (இறைவனுக்கு அஞ்சுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாவான்.
  3. மேலும் அநாதைகளுக்கு அவர்களின் பொருட்களைக் கொடுத்து விடுங்கள். தூய்மையானதற்கு ஈடாக, தூய்மையற்றதை மாற்றாதீர்கள். மேலும் அவர்களின் பொருட்களை உங்கள் பொருட்களுடன் (சேர்த்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெருங்குற்றமாகும்.
  4. உங்களால் அனாதைகளின் விஷயத்தில் நீதியுடன் நடக்க முடியாதென நீங்கள் அஞ்சினால், (மற்றப்) பெண்களிலிருந்து உங்களுக்கு விருப்பமான பெண்களுள் இரண்டோ, மூன்றோ, நான்கோ மணந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் உங்களால் நீதியுடன்2 நடக்க இயலாதென நீங்கள் அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் வலக்கரங்களிலுள்ளவளை (மணந்து கொள்ளுங்கள்.) இது நீங்கள் அநீதி இழைக்காமலிருப்பதற்கு மிகவும் நெருங்கியதாகும்.
  5. மேலும் பெண்களுக்கு அவர்களின் மஹர்களை3 மனவிருப்புடன் கொடுத்து விடுங்கள். பின்னர் அவர்கள் அதிலிருந்து ஒரு பகுதியினைத் தாங்களாகவே மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தந்தால், உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் முடிவைப் பொறுத்தவரை நல்லதாகவும் இருக்குமென அறிந்து கொண்டு, நீங்கள் அதை உண்ணுங்கள்.
  6. அல்லாஹ் உங்களுக்கு உதவக்கூடியதாக்கிய உங்கள் செல்வங்களை அறிவில் குறைந்தவர்களிடம் கொடுத்து விடாதீர்கள். அவற்றிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். மேலும் அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள். மேலும் அவர்களிடம் பொருத்தமான (நல்ல) வார்த்தைகளை கூறுங்கள்.
  7. மேலும் அநாதைகள் திருமணத்(தின் வயதை அடையும் வரை, அவர்க(ளின் அறிவுத்திறமை)களைச் சோதியுங்கள். பின்னர் நீங்கள் அவர்களிடத்தில் அறிவுடைமை(யின் அறிகுறி)யினைக் கண்டால், அவர்களின் பொருட்களை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்கள் பெரியவராவதை அஞ்சி, அவசர அவசரமாகவும், அநியாயமாகவும் அவற்றை விழுங்காதீர்கள். செல்வந்தராக இருப்பவர், (அப்பொருளை உபயோகிப்பதை விட்டும்) முழுவதுமாக விலகிக் கொள்ளவேண்டும். ஆனால் ஏழையாக இருப்பவர், பொருத்தமான முறையில் (அப்பொருளிலிருந்து) உண்ணட்டும். பின்னர் நீங்கள் அவர்களிடம் அவர்களின் பொருட்களை திருப்பிக்கொடுக்கும்போது, அவர்களின் முன்னிலையில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ் கணக்கெடுப்பதில் போதுமானவனாவான்.
  8. ஆண்களுக்கு அவர்களின் பெற்றோரும், நெருங்கிய உறவினரும் விட்டுச் செல்வதில் ஒரு பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்களின் பெற்றோரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் செல்வதில் ஒரு பங்கு உண்டு. அது குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் சரியே. (அது இறைவனால்) வரையறுக்கப்பட்ட பங்காகும்.
  9. (பாகப்) பிரிவினையின்போது, (மற்ற) உறவினர்களும், அநாதைகளும், ஏழைகளும் வந்துவிட்டால், அதிலிருந்து அவர்களுக்கு(ம்) ஏதேனும் கொடுங்கள். மேலும் அவர்களுக்குப் பொருத்தமான (இனிய) சொற்களைக் கூறுங்கள்.
  10. மேலும் தங்களுக்குப் பின்னால் வலுவிழந்த குழந்தைகளைத் தாம் விட்டுச் சென்றால், அவர்களுக்கு என்ன நேருமோ என்று அஞ்சுவோர் (மற்ற அநாதைகளைப் பற்றியும்) அல்லாஹ்விற்குப் பயந்து செயலாற்ற வேண்டும். அவர்கள் நேர்மையான4 பேச்சைப் பேசவேண்டும்.
  11. அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குவோர், நிச்சயமாகத் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் சுடர் விட்டெறியும் நெருப்பில் நுழைவர். ரு1
  12. அல்லாஹ், உங்கள் சந்ததிகள் பற்றி(ப் பின்வருமாறு) உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். ஓர் ஆணுக்குரிய(பங்கான)து, இரு பெண்களுக்குரிய பங்கிற்குச் சமம். (சந்ததிகள்) இரண்டிற்கு மேல் பெண்கள் (மட்டுமாக) இருப்பார்களாயின் அவர்களுக்கு (மரணமடைந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருத்தியாக (மட்டும்) இருந்தால் அவளுக்கு (அவர் விட்டுச் சென்ற சொத்தில்) பாதியுண்டு. (மரணமடைந்த) அவருக்குச் சந்ததி(கள்) இருந்தால் அவருடைய பெற்றோர்களுக்கு (அதாவது) அவர்களுள் ஒவ்வொருவருக்கும் அவர் விட்டுச் சென்றதிலிருந்து ஆறிலொரு பங்கு (வரையறுக்கப்பட்டு) உள்ளது. அவருக்கு சந்ததி இல்லாதிருந்து, அவருடைய பெற்றோர்கள் (மட்டும்) அவருடைய சொத்துக்கு உரியவராயின் அவருடைய தாயாருக்கு மூன்றிலொரு பாகம் (வரையறுக்கப்பட்டு) உள்ளது. எனினும் அவருக்குத் தம் உடன்பிறப்புகள் இருந்தால், அவருடைய தாயாருக்கு ஆறிலொரு பாகம் (வரையறுக்கப்பட்டு) உள்ளது. (இப்பங்குகளெல்லாம்) அவருடைய வஸிய்யத் (மரணசாசனம், அவருடைய) கடன் ஆகியவற்(றை நிறைவேற்)றி(யத)ற்குப் பின்னரே கொடுக்கப்படும். உங்கள் தந்தையர்கள், (மூதாதையர்கள்) உங்கள் ஆண்மக்கள் ஆகியவர்களுள் உங்களுக்கு மிகவும் பயனளிப்பவர் எவர் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ்வினால் வரையறுக்கப்பட்ட கடமையாகும். நிச்சயமாக அல்லாஹ் மிக்க அறிபவனும் நுண்ணறிவுடையோனுமாவான்.
  13. உங்கள் மனைவியர்களுக்குச் சந்ததி இல்லையெனில், அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்கு (உரிய பங்கு) பாதியாகும். அவர்களுக்கு சந்ததிகள் இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்கு (உரிய பங்கு) நான்கிலொன்றாகும். (இப்பங்குகள்) அவர்கள் செய்திருக்கும் வஸிய்யத் (இறுதி விருப்பம்) (அவர்களின்) கடன் ஆகியவற்(றை நிறைவேற்)றி(யத)ற்குப் பின்னர் (எஞ்சியிருக்கும் பொருள்களிலிருந்து) கொடுக்கப்படும். உங்களுக்குச் சந்ததி இல்லையாயின், நீங்கள் விட்டுச் செல்வதிலிருந்து (உங்கள் மனைவியர்களாகிய) அவர்களுக்கு (உரிய பங்கு) நான்கிலொன்றாகும். உங்களுக்கு சந்ததி இருந்தால் நீங்கள் விட்டுச் செல்வதிலிருந்து (மனைவியர்களாகிய) அவர்களுக்கு (உரிய பங்கு) எட்டிலொன்றாகும். (இப்பங்குகள்) நீங்கள் செய்திருக்கும் வஸிய்யத், (உங்களுடைய) கடன் ஆகியவற்(றை நிறைவேற்)றி(யத)ற்குப் பின்னரே கொடுக்கப்படும். எந்த ஆணின் அல்லது எந்த பெண்ணின் பரம்பரைச் சொத்து பங்கிடப் படுகின்றதோ, அவருக்குத் தந்தையும் சந்ததியும் இல்லாமலிருந்து அவருக்கு உடன் பிறந்தவனோ உடன் பிறந்தவளோ இருந்தால்5 இவர்களுள் ஒவ்வொருவருக்கும் (உரிய பங்கு) ஆறிலொன்றாகும். அவர்கள் அதை விடவும் கூடுதலாக இருந்தால், அவர்கள் (எல்லாரும்) மூன்றிலொன்றிற்கு சம பங்குதாரர்கள் ஆவர். (இப்பங்குகள் மரணமடைந்தவர்) செய்திருக்கும் வஸிய்யத், (அவருடைய) கடன் ஆகியவற்(றை நிறைவேற்)றி(யத)ற்குப் பின்னர் எஞ்சியுள்ள பொருளிலிருந்து கொடுக்கப்படும். (இந்தப் பங்கீட்டில்) எவருக்கும் தீங்கிழைக்கும் நோக்கம்  இருக்கக் கூடாது. (இது) அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு வந்துள்ள) கட்டளையாகும். மேலும் அல்லாஹ் நன்கு அறிபவனும், சகித்துக் கொள்பவனுமவான்.
  14. இவை அல்லாஹ்வின் (வரையறுக்கப்பட்ட) வரம்புகளாகும். அல்லாஹ்வுக்கும் அவனுடைய  தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்களை, கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்களில் அவன் நுழையச் செய்வான். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பர். இதுவே பெரும் வெற்றியாகும்.
  15. மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல், அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறுபவரை, அவன் நெருப்பில் நுழையச் செய்வான். அவர் அதில் நீண்ட காலம்6 இருந்து கொண்டிருப்பர். அவருக்கு இழிவுபடுத்தக் கூடிய தண்டனையும் (விதிக்கப்பட்டு) உள்ளது. ரு2
  16. மேலும் உங்கள் பெண்களுள், வெளிப்படையான7 ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைச் செய்பவளுக்கெதிராக உங்(கள் உறவினர்கள் அல்லது அண்டை வீட்டினர்)களிலிருந்து நான்கு சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அவர்கள் சாட்சியம் கூறினால், அவர்களுக்கு (அந்தப் பெண்களை) மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஏதாவதொரு வழியை ஏற்படுத்தும் வரை நீங்கள் அவர்களை (உங்கள்) வீடுகளில் தடுத்து வையுங்கள்.
  17. உங்களுள் இரண்டு ஆண்கள் வெறுக்கத்தக்க செயலைச் செய்தால்,8 நீங்கள் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். பின்னர் அவ்விருவரும் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிடுவார்களாயின், அவ்விருவரிடம் கண்டுங்காணாதது போன்று நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்பை மிக்க ஏற்றுக் கொள்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவன்.
  18. அறியாமையினால் தீமையைச் செய்து விட்டு, உடனே(யே) பாவ மன்னிப்புக் கோருகிறவர்களின் பாவமன்னிப்பை மட்டும் ஏற்றுக் கொள்வதே அல்லாஹ்வுக்குக் கடமையாகும். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தயவு காட்டுகின்றான். அல்லாஹ் மிக்க அறிபவனும், நுண்ணறிவுடையோனுமாவான்.
  19. பாவங்களைச் செய்துகொண்டே இருப்பவர்களுள் ஒருவருக்கு, மரண நேரம் வரும்போது நான் நிச்சயமாக இப்போது பாவமன்னிப்புத் தேடுகிறேன் என்று கூறுபவர்களுக்கும், நிராகரிப்பின் நிலையிலேயே இறப்பவர்களுக்கும் பாவமன்னிப்பு(ப் பெறும் உரிமை) கிடையாது. இத்தகையோருக்கு நாம் வேதனைக்குரிய தண்டனையை ஆயத்தம் செய்து வைத்துள்ளோம்.
  20. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் வலுக்கட்டாயமாகப் பெண்களுக்கு வாரிசுகளாவது, உங்களுக்கு ஆகுமானதன்று. நீங்கள் அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து ஒரு பகுதியினை(ப் பறித்து) எடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். எனினும்9 அவர்கள் மிக வெளிப்படையாக ஏதாவதொரு தீமையைச் செய்வார்களாயின் (அதற்குரிய கட்டளை மேலே கூறப்பட்டுவிட்டது). நீங்கள் அவர்களுடன் நல்ல முறையில் (கண்ணியமான முறையில்) நடந்துகொள்ளுங்கள். மேலும் நீங்கள் அவர்களை வெறுக்கின்றீர்கள் எனின் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்க முற்றிலும் வாய்ப்புண்டு (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
  21. மேலும் நீங்கள் (ஒரு) மனைவியின் இடத்தில் (மற்றொரு) மனைவியை மாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில், நீங்கள் அவர்களுள் ஒருத்திக்கு (ப் பொருட்) குவியலொன்றினைக் கொடுத்திருந்தாலும், அதிலிருந்து சிறிதும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அதனை அவதூறினாலும், மிக வெளிப்படையான பாவத்தாலும் எடுத்துக் கொள்வீர்களா?
  22. நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கவும், (மனைவியர்களாகிய) அவர்கள் உங்களிடம் உறுதிவாய்ந்த ஓர் உடன்படிக்கையைப் பெற்றிருக்கவும் செய்யும் நிலையில், நீங்கள் அ(ந்தப் பொருளான)தை எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள்?
  23. உங்கள் தந்தையர்கள் மணந்து கொண்ட பெண்களுள் எவரையும் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (முன்னர்) நிகழ்ந்து விட்டது தவிர. நிச்சயமாக இ(ச் செயலான)து கெட்டதும், கோபமூட்டக் கூடியதும் தீய வழக்கமாகவும் இருந்தது. ரு3
  24. உங்கள் தாய்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரரின் புதல்விகளும், (உங்கள்) சகோதரியின் புதல்விகளும், உங்களுக்கு பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்களும், நீங்கள் வீடுகூடிய உங்கள் மனைவிக(ளுடைய முந்தய கணவர்க)ளுக்குப் பிறந்து, உங்கள் வீடுகளில் வளர்ந்து வரும் பெண்களும் உங்களுக்கு விலக்கப்பட்டவர்களாவர். ஆனால் நீங்கள் அவர்க(ளுடைய தாய்க)ளுடன் வீடு கூட வில்லையாயின், (அவர்களின் புதல்விகளை மணந்து கொள்வதில்) உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. (இவ்வாறே) உங்கள் முதுகுத்தண்டுகளிலிருந்துள்ள உங்கள் புதல்வர்களின் மனைவிகளும் (உங்களுக்கு விலக்கப்பட்டவர்களாவர்). நீங்கள் இரு சகோதரிகளை (திருமணத்தில்) இணைத்துக் கொள்வதும் (விலக்கப்பட்டதாகும்). எனினும் முன்னர் நிகழ்ந்து விட்டது தவிர. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  25. மேலும் உங்கள் வலக்கரங்கள் உரிமையாக்கிக் கொண்ட பெண்களைத் தவிர, மணமான பெண்கள் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றனர்),10 இதனை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கியுள்ளான். (விலக்கப்பட்ட) இவர்கள் நீங்கலாக ஏனையவர்கள் உங்களுக்கு ஆகுமானவர்கள். அவர்களை விபச்சார முறையிலன்றி, உங்கள் செல்வத்தின் மூலம் (மஹரைக் கொடுத்து) முறைப்படி மணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிடமிருந்து பயனடைந்தால், அவர்களுக்கெனக் குறிப்பிட்ட மஹரைக் கொடுத்து விடுங்கள். மஹர் தொகையைக் நிர்ணயித்த பின்னர், அது குறித்து நீங்கள் உங்களுக்குள் உடன்பாடு செய்து கொள்வதில் எந்த குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனும், நுண்ணிய ஞானம் உடையவனும் ஆவான்.
  26. மேலும் உங்களுள் சுதந்திரமான, நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து கொள்வதற்கு சக்தியற்றவர் உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (பெண்களுள்) அதாவது நம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுள் ஒருவரை மணந்து கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையினை நன்கு அறிகின்றான். நீங்கள் ஒருவர் மற்றொருவருடன் (தொடர்பு) உள்ளவராவீர்கள். ஆகவே அவர்களை அவர்களின் காப்பாளர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள், அவர்கள் கற்புடையவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களுமாக இருப்பின், நீங்கள் அவர்களின் மஹர்களை12 முறைப்படிக் கொடுத்து விடுங்கள். அவர்களை மணஞ்செய்து கொண்ட பின்னர் அவர்கள் வெட்கங்கெட்ட செயலைச் செய்தால் அவர்களுக்குரிய தண்டனை சுதந்திரமான பெண்களுக்குரியதில் பாதியாகும். இ(ந்த அனுமதியான)து உங்களுள் பாவத்திற்கு அஞ்சுகின்றவருக்கேயாகும்.13 நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டால் அது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மன்னித்தருளுகின்றவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனும் ஆவான். ரு4
  27. உங்களுக்கு முன்(னர் சென்று) உள்ளவர்களின் நடைமுறைகளை உங்களுக்கு விளக்கிக்காட்டவும் (அவர்களின் பக்கம்) உங்களுக்கு வழிகாட்டவும், உங்களிடத்துக் கருணைகாட்டவும், அல்லாஹ் விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும், நுண்ணறிவுடையோனு மாவான்.
  28. உங்களிடம் பரிவு காட்டவே அல்லாஹ் விரும்புகின்றான். தீய இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ நீங்கள் (தீமையின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
  29. உங்களுக்குச் சுமையை எளிதாக்கவே அல்லாஹ் விரும்புகின்றான். ஏனென்றால் மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
  30. நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கிடையில் ஒத்துக்கொண்ட வணிகத்தின் மூலமாக அல்லாமல் உங்கள் பொருளை ஒருவருக்கொருவர் தவறான முறையில் விழுங்காதீர்கள். நீங்கள் உங்களையே கொலை செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மேன்மேலும் கருணை செய்பவனாவான்.
  31. வரம்பை மீறியும், அநீதி இழைத்தும் இவ்வாறு செய்பவரை நாம் நிச்சயமாக நெருப்பில் எறிவோம். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிது.
  32. உங்களுக்குத் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், நாம் உங்களின் (சிறு) குறைபாடுகளை உங்களை விட்டகற்றி விடுவோம். மேலும் பெருங்கண்ணியத்திற்குரிய இடத்தில் உங்களை நுழையச் செய்வோம்.
  33. மேலும் உங்களுள் சிலருக்கு (வேறு) சிலரை விடவும் அல்லாஹ் எதில் சிறப்பினை வழங்கியுள்ளானோ அதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் எதை சம்பாதித்தனரோ அதில் அவர்களுக்குரிய பங்கு உண்டு. (அதேபோன்று) பெண்கள் எதனை சம்பாதித்தனரோ அதில் அவர்களுக்குரிய பங்கு உண்டு. நீங்கள் அல்லாஹ்விடம் (மட்டும்) அவனுடைய அருளினைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிகின்றவனாவான்.
  34. பெற்றோர்களும், நெருங்கிய உறவினர்களும் மற்றும் உங்களின் உறுதிமொழியால் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டவர்களும்14 (அதாவது மனைவி அல்லது கணவன்) விட்டுச் செல்கின்றவற்றிற்கு, வாரிசுகளை நாம் நியமித்துள்ளோம். எனவே அவர்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாவான். ரு5
  35. ஆண்கள், பெண்களின் காப்பாளர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியுள்ளான். மேலும் அவர்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்காகச்) செலவு செய்கின்றனர். எனவே நல்ல பெண்கள்  கட்டுப்பட்டு நடப்பவர்களும், அல்லாஹ் பாதுகாத்துள்ள (தங்கள் கணவர்களின்) இரகசியங்களைக் காப்பவர்களுமாவர். மேலும் கட்டுப்படமாட்டார்கள்15 என்று நீங்கள் அஞ்சுபவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். அவர்களைப் படுக்கைகளில் தனியாக விட்டு விடுங்கள். அவர்களைத் திருத்துவதற்காக (இலேசாக) அடியுங்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால் அவர்களுக்கு எதிரான எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மேலானவனும் மிகப்பெரியவனுமாவான்.
  36. மேலும் (கணவன் மனைவியாகிய) அவ்விருவருக்கிடையில் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சினால், அவனுடைய குடும்பத்தினரிலிருந்து நடுவர் ஒருவரையும், அவளுடைய குடும்பத்தினரிலிருந்து நடுவர் ஒருவரையும் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரும் இணக்கத்தை விரும்பினால், (கணவன் மனைவியாகிய) அவ்விருவருக்கிடையில் அல்லாஹ் ஒற்றுமையை உருவாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனும், நன்கு உணர்ந்தவனுமாவன்.
  37. மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். மேலும் பெற்றோர்களுடன் (மிக்க) நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், உறவினர்களான அண்டை வீட்டுக்காரர்கள், அந்நியர்களான அண்டை வீட்டுக்காரர்கள். உங்களுடன் இருப்பவர்கள், வழிப்போக்கர்கள், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியவர்களுடன் (நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்).  கர்வங்கொண்டோரையும். பெருமையடிப்போரையும் அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
  38. இத்தகையோர் (தாமும்) கருமித்தனம் செய்து, மக்களை(யும்) கருமித்தனம் செய்ய ஏவுகின்றனர். அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்களுக்கு இழிவுபடுத்தக் கூடிய தண்டனையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
  39. மேலும் தங்கள் செல்வங்களை மக்களுக்குக் காட்டுவதற்காகச் செலவு செய்வோரும் அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொள்ளாதவர் (தீய முடிவினை பெறுவோர்) ஆவர். ஷய்த்தானைத் தங்களின் கூட்டாளியாகக் கொண்டவர்கள் அவன் மிகத் தீய கூட்டாளி (என்பதை நினைவில் கொள்ளட்டும்.
  40. அவர்கள் அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து (அவனது வழியில்) செலவு செய்தும் இருப்பார்களாயின் அவர்களுக்கு என்ன (தீங்கு) நேர்ந்திருக்கும்? மேலும் அல்லாஹ் அவர்களை நன்கு அறிந்திருக்கின்றான்.
  41. நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அது நற்செயலாக இருக்குமாயின் அவன் அதனை அதிகமாக்கித் தன்னிடமிருந்து மாபெரும் நற்பலனை வழங்குவான்.
  42. நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைக் கொண்டு வரும்போது, உம்மை அவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டு வரும் போது அவர்களின் நிலை எவ்வாறிருக்கும்?
  43. நிராகரித்து இத்தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் அந்நாளில் (அந்தோ!) தாங்கள் பூமியில் புதையுண்டிருக்கக் கூடாதா என்று எண்ணுவர். மேலும் அவர்களால் அல்லாஹ்விடம் எதையும் மறைக்க இயலாது. ரு6
  44. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் கூறுவதை என்னவென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மயக்க நிலையில்16 இருக்கும்போது தொழுகையை அணுகாதீர்கள். மேலும் நீங்கள் (தொழுகைக்காகக் கட்டாயம்) குளிக்க வேண்டிய நிலையில் இருக்கும்போது, நீங்கள் பயணத்திலிருந்தாலன்றி குளிக்கும் வரையிலும் (தொழாதீர்கள்). நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருக்கும்பொழுது (தொழுகைக்காக கட்டாயம்) குளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அல்லது உங்களிலொருவர் கழிப்பிடத்திலிருந்து வெளிவரவோ, பெண்களைத் தீண்டவோ செய்திருக்கும் நிலையில் தண்ணீர் கிடைக்காமலிருந்தால், தூய மண்ணை நாடுங்கள். (அதாவது தயம்மும் செய்யுங்கள்).17 பின்னர் (நீங்கள் மண்ணுள்ள அக்கைகளால்) உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க பொறுத்துக் கொள்பவனுமாவன்.
  45. (இறை) வேதத்திலிருந்து சிறியதொரு பகுதி வழங்கப் பெற்றவர்களைப் பற்றி உமக்கு தெரியாதா? அவர்கள் வழிகேட்டை (விலைக்கு) வாங்குகின்றனர். நேர்வழியிலிருந்து நீங்களும் தவறிவிட வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.
  46. மேலும் அல்லாஹ் உங்கள் பகைவர்களை (உங்களை விட) நன்கு அறிந்திருக்கின்றான். மேலும் அல்லாஹ் நட்புக்குப் போதுமானவன். அல்லாஹ் ஓர் உதவியாளனாயிருக்கவும் போதுமானவன்.
  47. யூதர்களுள் சிலர் (இறை) வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். மேலும் நாங்கள் செவியேற்றோம், நாங்கள் கீழ்ப்படியமாட்டோம் என்றும் (எங்கள் விஷயங்களை) நீர் கேளும்; (இறைவசனத்தை) நீர் கேட்காமலிரும்; நீர் எங்களைக் கவனித்துக் கொள்ளும் என்றும், தங்கள் நாவுகளால் பொய்யுரைத்தவர்களாகவும், மார்க்கத்தைப் பழித்தவர்களாகவும் (அவர்கள் கூறுகின்றனர்).19 நாங்கள் செவியுற்றோம்; நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்றும் நீர் கேட்பீராக என்றும் எங்களை(க் கருணையுடன்) நோக்குவீராக என்றும் அவர்கள் கூறியிருந்தால், அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், மிக்க நேர்மையானதாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். இதனால் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
  48. வேதம் கிடைக்கப் பெற்றவர்களே! உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்துகின்ற, நாம் (தற்போது) இறக்கிய இ(வ்வேதத்)தின் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். இல்லையெனில் நாம் உங்களின் தலைவர்களை அழித்துப் புறமுதுகு காட்டி ஓடச் செய்வோம்.20 அல்லது நாம் ஸபத்து (சனிக்கிழமை)க் காரர்களைச் சபித்தது போன்று அவர்களை(யும்) சபித்துவிடுவோம்.21 மேலும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேறியே தீரும்.
  49. தனக்கு இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். இ(ந்தப் பாவத்)தை விடக் குறைந்ததை தான் நாடியவருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு (எதையாவது) இணைவைப்பவன், மாபெரும் பாவத்தை உருவாக்கிக் கொண்டான்.
  50. தங்களைத் தாங்களே தூயவர்கள் என்று கருதுபவர்களின் நிலை உமக்கு தெரியாதா? ஆனால் அல்லாஹ்வே! தான் விரும்புகின்றவரைத் தூய்மையாக்குகிறான். அவர்களுக்கு இம்மியளவு22 கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது.
  51. அல்லாஹ் மீது அவர்கள் எவ்வாறு பொய்யைப் புனைந்து கூறுகின்றனர் என்று நீர் பாரும். (மிகவும்) பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமானதாகும். ரு7
  52. வேதத்திலிருந்து சிறியதொரு பகுதி வழங்கப் பெற்றவர்களைப் பற்றி உமக்குத் தெரியாதா? அவர்கள் பயனற்றவற்றிலும்23 எல்லையை மீறுபவர்களிடத்தும் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் நிராகரிப்பவர்களைப் பற்றி இவர்களே நம்பிக்கை கொண்டவர்களை விட மேலான நேர்வழியைப் பெற்றவர்கள் என்றும் கூறுகின்றனர்.
  53. இத்தகையவர்களை அல்லாஹ் சபித்துள்ளான். அல்லாஹ் ஒருவனைச் சபித்தால் அவனுக்கு (எந்த) உதவியாளனை(யும்) ஒருபோதும் நீர் காணமாட்டீர்.
  54. அவர்களுக்கு ஆட்சியில் ஏதேனும் பங்கு உள்ளதா? அவ்வாறிருந்தால் அவர்கள் மக்களுக்கு இம்மியளவும்24 கொடுக்கமாட்டார்கள்.
  55. அல்லது அல்லாஹ் தன் அருளிலிருந்து மக்களுக்கு வழங்கியுள்ளதற்காக இவர்கள் அவர்களிடம் பொறாமை கொள்கின்றனரா? (அவ்வாறாயின்) நாம் இப்ராஹீமின் சந்ததிகளுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கினோம்.25 (மேலும்) நாம் அவர்களுக்கு மாபெரும் ஆட்சியையும் வழங்கியிருந்தோம்.
  56. பின்னர் அவர்களுள் சிலர் இ(ந்)த (புதிய வேதத்தி)ன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுள் மற்றுஞ்சிலரோ (நம்பிக்கை கொள்ளாது) அதிலிருந்து நின்று விட்டனர். அவர்களுக்குத் தண்டனையாகக் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பே போதுமானது.
  57. நம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்களை விரைவிலே(யே) நாம் நெருப்பில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் வெந்து விடும்போதெல்லாம் அவர்கள் தண்டனையை சுவைப்பதற்காக நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றிக்கொடுப்போம். நிச்சயமாக அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவுடையோனுமாவன்.
  58. நம்பிக்கைகொண்டு நற்செயல் செய்பவர்களை நாம் கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்களில் கட்டாயம் நுழையச் செய்வோம். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்களுக்கு அவற்றில்  தூய இணைகள் உள்ளனர். மேலும் நாம் அவர்களை அடர்த்தியான நிழலில் (வாழ) நுழையச் செய்வோம்.
  59. நீங்கள் அமானத்துகளை26 (நம்பி ஒப்படைப்பவற்றை) அவற்றிற்குத் தகுதியானவர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும். நீங்கள் மக்களுக்கிடையில் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றது எதுவோ நிச்சயமாக அதுவே மிகவும் சிறந்தது. நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும் பார்ப்பவனுமவான்.
  60. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடங்கள், இத்தூதருக்கும், உங்களுடைய அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். பின்னர் உங்களுக்குள் ஏதாவது ஒன்றில் தர்க்கம் ஏற்பட்டால் நீங்கள் அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொண்டவர்களாயின் அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடம் கொண்டு செல்லுங்கள். (அவர்களின் கட்டளையின் அடிப்படையில் பிரச்சனைக்கு முடிவு காணுங்கள்) இ(வ்வாறு செய்வ)து சிறந்ததும், மிக்க நல்ல முடிவைத் தருகின்றதுமாக இருக்கும். ரு8
  61. உமக்கு இறக்கப்பட்டதிலும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதிலும் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக வாதிப்பவர்களை நீர் கண்டதில்லையா? கிளர்ச்சியாளர்கள்27 மூலமாக தீர்ப்பை பெறாதீர்கள் என்றும் அவர்கள் கூறியதற்கேற்ப நடக்க வேண்டாம் என்றும் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தும் அவர்களையே தீர்ப்பளிப்பவர்களாக ஆக்க இவர்கள் நாடுகின்றனர். ஏனென்றால் இவர்களை அபாயகரமான வழிகேட்டில் செலுத்தவே ஷய்த்தான் விரும்புகின்றான்.
  62. அல்லாஹ் இறக்கியதன் பக்கமும் (அவன்) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள் என்று இவர்களிடம் கூறப்படும் போது நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகிச் செல்வதை நீர் காண்கின்றீர்.
  63. பின்னர் அவர்களின் செயல்களின் விளைவாக அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது அவர்கள் (பதற்றமடைந்து) நாங்கள் நல்ல முறையில் நடந்துக்கொள்வதையும், இணக்கம் செய்து வைப்பதையும் தான் நாடினோம் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொண்டு உம்மிடம் வருகின்றனரே (அது) ஏன்?
  64. இத்தகையவர்களின் உள்ளங்களில் இருப்பதனை அல்லாஹ் (நன்கு) அறிகின்றான். ஆகவே நீர் அவர்களை விட்டு விலகியும், அவர்களுக்கு அறிவுறுத்தியும், அவர்களிடத்து நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடிய சொற்களைக் கூறவும் செய்வீராக.
  65. நாம் எந்தத் தூதரையும் அல்லாஹ்வின் கட்டளையினால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தவிர அனுப்பவில்லை. அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைத் தேடினால் மேலும் அவர்களுக்குக்காக தூதரும் பாவமன்னிப்புக் கோரினால் அவர்கள் கட்டாயம் அல்லாஹ்வை மிகுந்த இரக்கம் உடையவனாகவும், மேன்மேலும் கருணை காட்டுபவனாகவும் கண்டிருப்பர்.
  66. எனவே உம்முடைய இறைவன் மீது ஆணையாக அவர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றவற்றில் உம்மை நீதிபதியாக ஆக்கி பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பினை (தம்) உள்ளங்களில் எவ்வித தயக்கத்தையும் காட்டாமல் ஏற்று, முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்காதவரை அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.
  67. நீங்கள் உங்கள் உயிர்களைத் தியாகம் செய்யுங்கள்28 என்றோ, நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி விடுங்கள்29 என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்போமாயின், அவர்களுள் ஒரு சிலரைத் தவிர (மற்றவர்கள்) இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி அவர்கள் நடந்து இருந்தால், அது அவர்களுக்குச் சிறந்ததும், மிகுந்த உறுதியளிக்கக் கூடியதுமாக இருந்திருக்கும்.
  68. அவ்வாறாயின் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நம்மிடமிருந்து (மா)பெரும் நற்பலனை வழங்கியுமிருப்போம்.
  69. மேலும் நாம் அவர்களுக்குக் கட்டாயம் நேரான வழியினைக் காட்டியிருப்போம்.
  70. அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களான, நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), சித்தீக்குகள் (உண்மையாளர்கள்), ஷஹீதுகள் (உயிர்த்தியாகிகள்),சாலிஹ்கள் (நல்லடியார்கள்), ஆகியோரைச் சேர்ந்தவர்களாக30 இருப்பார்கள். இத்தகையோர் (மிக்க) நல்ல நண்பர்களாவர்.
  71. இந்த அருள் அல்லாஹ்விடமிருந்து (கிடைத்து)ள்ளதாகும். அல்லாஹ் நன்கு அறிபவனாவான். ரு9
  72. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்கான ஏற்பாட்டை செய்த பின்னரே உங்கள் (வீடுகளிலிருந்து) சிறிய அணிகளாகவோ, பெரிய அணிகளாகவோ வெளியேற வேண்டும்.
  73. (ஒவ்வொரு பணியின்போதும்) கட்டாயம் பின் தங்கி விடுகின்ற சிலரும், நிச்சயமாக உங்களுள் உள்ளனர். உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ் எனக்குப் பேரருள் செய்துள்ளான்; எனவேதான் நான் அவர்களுடன் இருக்கவில்லை என்று கூறுகின்றனர்.
  74. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஏதேனும் அருள் கிடைத்தால், அந்தோ! நா(மு)ம் அவர்களுடன் இருந்திருப்பின் மாபெரும் வெற்றிபெற்றிருப்போமே என்று அவர்களுக்கும் உங்களுக்குமிடையில் நட்பு ரீதியிலான எவ்விதத் தொடர்பும் இல்லாமலிருந்தது போல் நிச்சயமாக அவர்கள் கூறுகின்றனர்.
  75. எனவே இவ்வுலக வாழ்க்கையை விட்டு மறுமையைத் தேர்ந்தெடுப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படவோ, வெற்றி பெறவோ செய்வோருக்கு நாம் (மிக) விரைவில் பெரும் நற்பலனை வழங்குவோம்.
  76. மேலும் அல்லாஹ்வின் பாதையிலும், பலவீனர்களான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரின் பாதையிலும்31 நீங்கள் போர் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் எங்கள் இறைவா! அநீதி இழைப்போர் வாழ்கின்ற இந்த ஊரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக; உன்னிடமிருந்து எங்களுக்கு ஒரு நண்பரை உருவாக்குவாயாக. மேலும் உன்னிடமிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்துவாயாக என்று கூறுகின்றனர்.
  77. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றனர். நிராகரிப்பவர்கள் ஷய்த்தானின் பாதையில் போரிடுகின்றனர். ஆகவே நீங்கள் ஷய்த்தானுடைய நண்பர்களுக்கு எதிராகப் போர் செய்யுங்கள். ஷய்த்தானுடைய திட்டம் நிச்சயமாகப் பலவீனமானது. ரு10
  78. நீங்கள் உங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஸக்காத்து கொடுங்கள் என்று கூறப்பட்டவர்களின் நிலை உமக்குத் தெரியாதா? (அப்போது அவர்கள் போர் செய்வதை விரும்பினர்) ஆனால் போர் செய்வது அவர்களுக்குக் கடமையாக்கப்பட்டபோது உடனேயே அவர்களுள் சிலர் இறைவனுக்கு அஞ்ச வேண்டியது போன்று அல்லது அதைவிட அதிகமாக மக்களுக்கு அஞ்சத் தொடங்கினர். எங்கள் இறைவா! போர் செய்வதை நீ ஏன் எங்களுக்கு கடமையாக்கினாய்! சிறிது காலம்வரை நீ எங்களுக்கு (மேலும்) காலக்கெடு தரக்கூடாதா எனக் கூறத் தொடங்கினர். நீர் கூறுவீராக: உலகிலிருந்து கிடைக்கும் பயன் அற்பமானது; இறையச்சம் உடையவர்க்கு மறுமையே சிறந்தது. மேலும் இம்மியளவு கூட உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.
  79. நீங்கள் எங்கிருந்தாலும், வலிமைவாய்ந்த கோட்டைகளில் நீங்கள் இருந்தாலுஞ் சரியே மரணம் வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளும். (மேற்க்கூறப்பட்ட) அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டால் இது உம்மிடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். (இவை) எல்லாமே அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நீர் கூறுவீராக. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்விஷயத்தையும் விளங்கிக் கொள்வதன் பக்கம் இவர்கள் நெருங்குவதே இல்லை.
  80. ஏதேனும் நன்மை உமக்குக் கிடைத்தால் அது அல்லாஹ்விடமிருந்தே ஆகும். மேலும் ஏதேனும் தீமை உமக்குக் கிடைத்தால் அது உம்மிடமிருந்தே ஆகும்.32 மேலும் நாம் உம்மை மக்களுக்குத் தூதராக்கி அனுப்பியுள்ளோம். மேலும் அல்லாஹ்வே (உமக்கு) மிகச் சிறந்த சாட்சியாவான்.
  81. இத்தூதருக்கு கட்டுப்பட்டு நடக்கின்றவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார் (எனப் புரிந்து கொள்க). புறக்கணித்து விட்டவர்களுக்கு உம்மை நாம் கண்காணிப்பவராக அனுப்பவில்லை (என்பது நினைவிலிருக்கட்டும்).
  82. மேலும் கட்டுப்பட்டு நடப்பதே (தங்கள் பணியாகும்) என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்கள் உம்மிடமிருந்து சென்றுவிட்டால் அவர்களுள் ஒரு பிரிவினர் நீர் கூறுவதற்கு மாற்றமாகத் திட்டங்கள் தீட்டுகின்றனர். மேலும் அவர்கள் இரவில் தீட்டுகின்ற திட்டங்களை அல்லாஹ் பதிவு செய்கின்றான். எனவே நீர் அவர்களை விட்டு விலகுவீராக. மேலும் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பீராக. மேலும் அல்லாஹ்வே போதுமான பாதுகாவலன்.
  83. அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருப்பின் நிச்சயமாக அவர்கள் இதில் பல முரண்பாடுகளைக் கண்டிருப்பர்.
  84. மேலும் அமைதி அல்லது பயத்திற்குரிய எதேனுமொரு செய்தி அவர்களிடம் வந்தால் அவர்கள் அதனைப் பரப்பி விடுகின்றனர். அவர்கள் அதனைத் இத்தூதரிடமோ, தங்கள் அதிகாரிகளிடமோ கொண்டு சென்றிருந்தால் அவர்களுள் அதன் உண்மையைத் தெரிந்து கொள்வோர் அதனை அறிந்திருப்பர். உங்களுக்கு அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையுமில்லாதிருப்பின் ஒரு சிலரைத் தவிர நீங்கள் யாவரும் ஷய்த்தானைப் பின்பற்றிச் சென்றிருப்பீர்கள்.
  85. எனவே நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வீராக. நீர் உமக்கேயன்றி (மற்றெவருக்கும்) பொறுப்பாளியாக மாட்டீர். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீர் உற்சாகமூட்டுவீராக. அல்லாஹ் நிராகரிப்பவரின் போரைத் தடுத்து நிறுத்துவது முற்றிலும் சாத்தியமானதே. மேலும் அல்லாஹ்வின் போர் மிகக் கடினமானது. அவனுடைய தண்டனையும் மிகக் கடுமையானது.
  86. நல்லவற்றிற்குப் பரிந்துரை செய்கின்றவருக்கு அதில் ஒரு பங்குண்டு. தீயவற்றிற்குப் பரிந்துரை செய்கின்றவருக்கும் (அது போன்றே) அதில் ஒரு பங்குண்டு. அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான்.
  87. மேலும் உங்களுக்கு ஏதேனும் நல்வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டால் அதனைவிடச் சிறந்த முறையில் வாழ்த்துங்கள் அல்லது (குறைந்தது) அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கெடுப்பவனாவான்.
  88. அல்லாஹ் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. நிச்சயமாக அவன் உங்களை மறுமைநாள் வரை33 ஒன்று திரட்டிக் கொண்டேயிருப்பான் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. பேச்சில் அல்லாஹ்வை விட உண்மையாளன் எவன்? ரு11
  89. நயவஞ்சர்களைக் குறித்து நீங்கள் இரு பிரிவினர்களாக (பிரிந்து) இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப அல்லாஹ் அவர்களை முகங்குப்புற விழச் செய்துவிட்டான்.34 அல்லாஹ் அழித்துவிட்டவனை நீங்கள் நேரான பாதைக்குக் கொண்டுவர விரும்புகிறீர்களா? அல்லாஹ் அழித்து விடுகின்றவனுக்கு நீர் ஒருபோதும் எந்த வழியையுங்காண மாட்டீர்.
  90. மேலும் அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களும் நீங்களும்) ஒன்று போலாகிவிட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.35 எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) செல்லும் வரை நீங்கள் அவர்களுள் (எவரையும்) நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். பின்னர் அவர்கள் விலகிவிட்டால்36 அவர்களைப் பிடித்து விடுங்கள். மேலும் அவர்களை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்.37 அவர்களுள் (எவரையும்) நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
  91. எவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளதோ38 அந்த சமுதாயத்துடன் தொடர்புடையவர்கள் உங்களுடன் போரிடவோ, தங்கள் சமுதாயத்துடன் போரிடவோ அல்லது மனம் ஒப்பாத நிலையில் உங்களிடம் வந்தவர்கள் ஆகியோரைத் தவிர (மற்றையோருடன் போர் செய்யலாம்). அல்லாஹ் நாடினால் நிச்சயமாக அவர்கள் உங்களை வெல்லும்படிச் செய்திருப்பான். அப்போது அவர்கள் கட்டாயம் உங்களுடன் போரிட்டிருப்பர். எனவே அவர்கள் உங்களை விட்டு விலகினால் மேலும் உங்களுடன் போரிடாது இருந்தாலும், உங்களுடன் சமாதானத்தைக் கோரினாலும், அவர்களுக்கு எதிராக (செயல்பட) உங்களுக்கு எந்த வழியினையும் அல்லாஹ் (விட்டு) வைக்கவில்லை.
  92. மற்றுஞ் சிலரை39 நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்; அவர்கள் உங்களிடத்தில் பாதுகாப்பாக இருக்கவும், தமது சமுதாயத்தில் பாதுகாப்பாக இருக்கவும் விரும்புவார்கள். குழப்பத்தின் பக்கம் அவர்கள் திருப்பிவிடப்படும் போதெல்லாம் அவர்கள் அதில் தலைகுப்புற விழ வைக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானம் செய்து கொள்ளாமலும், தங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள். மேலும் அவர்களை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். இத்தகையோருக்கு எதிராக நாம் உங்களுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்துள்ளோம். ரு12
  93. தவறுதலாக நிகழ்வதன்றி எந்த ஒரு நம்பிக்கையாளனும், நம்பிக்கை கொண்ட (வேறு) ஒருவரைக் கொலை செய்வது அவனுக்கு ஏற்றதன்று. ஒருவன் ஒரு நம்பிக்கையாளாரைத் தவறுதலாகக் கொலை செய்துவிட்டால் நம்பிக்கை கொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவனது வாரிசுகள் தானமாக (விட்டு)க் கொடுத்தாலன்றி அவர்களுக்குரிய (இரத்த) ஈட்டுத் தொகையை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அ(க்கொலையுண்ட)வர் உங்களுக்கு எதிரியான ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் (அக்குற்றவாளி) நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். மேலும் அ(க்கொலைக்காளான)வர் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பின் அவரின் வாரிசுகளுக்கு (இரத்த) ஈட்டுத்தொகையைக் கொடுத்தலும், நம்பிக்கை கொண்ட அடிமையை விடுவித்தலும் வேண்டும். (இதற்கு) இயலாதவர் இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இ(ந்த மென்மையான)து அல்லாஹ்விடமிருந்து வந்த பரிவு ஆகும். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுண்ணிய ஞானமுள்ளவனுமாவான்.
  94. மேலும் எவரேனும் நம்பிக்கை கொண்ட ஒருவனை வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமேயாகும். அவன் அதில் நெடுங்காலம் தங்கிவிடுவான். அல்லாஹ் அவனிடத்துக் கோபங்கொண்டு அவனைச் சபித்துவிடுவான். மேலும் அவனுக்கு மாபெரும் தண்டனையும் ஏற்பாடு செய்துள்ளான்.
  95. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் பயணம் செய்யும்போது நன்றாக விசாரணை செய்துகொள்ளுங்கள். எவரும் உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவரிடம்) நீர் நம்பிக்கை கொண்டவர் இல்லை எனக்கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்கான பொருளை விரும்புகின்றீர்கள்.40 அல்லாஹ்விடமோ சிறந்த பொருள்கள் மிகுதியாக உள்ளன. முன்னர் நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். பின்னர் அல்லாஹ் உங்களுக்குச் சிறப்பாக அருள் புரிந்துள்ளான். எனவே நீங்கள் நன்கு விசாரணை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை நன்கு அறிபவனாவான்.
  96. நம்பிக்கை கொண்டவர்களுள் பாதிப்பு ஏதுமின்றி (வீணே) உட்கார்ந்திருப்பவர்களும், தங்கள் செல்வத்தாலும், தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் ஜிஹாது (அறப்போர்) செய்பவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அறப்போர் செய்கிறவர்களுக்கு (பின்தங்கி) இருப்பவர்களை விட அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்கியுள்ளான். மேலும் அல்லாஹ் அனைவரிடமும் நல்லதையே வாக்களித்துள்ளான். அல்லாஹ் அறப்போர் செய்பவர்களுக்கு (செயல்படாமல்) இருப்பவர்களை விட பெரும் கூலியினை அளித்து மேன்மையாக்கியுள்ளான்.
  97. (அந்த மேன்மையானவது) அவனிடமிருந்து மிக உயரிய தகுதிகளும் மன்னிப்பும், அருளும் கிடைக்கும். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு13
  98. தங்களுக்குத்தாமே தீங்கிழைத்தவர்களுக்கு41 வானவர்கள் மரணத்தைக் கொடுக்கின்றபோது (அவர்களிடம்) நீங்கள் எ(ந்த எண்ணத்)தில் இருந்தீர்கள் என்று அவர்கள் கேட்பார்கள். இதற்கு (ஹிஜ்ரத் செய்வதை தவிர்த்துக் கொண்ட) அவர்கள்: நாட்டில் நாங்கள் பலவீனர்களாக எண்ணப்பட்டோம் என்று கூறுவார்கள். (மலக்குகளாகிய) அவர்கள்: அல்லாஹ்வின் பூமி விரிவானதல்லவா? ஆதலால் நீங்கள் அதில் இடம் பெயர்ந்து சென்றிருக்கலாமே எனப் பதில் கூறுவர். எனவே இத்தகையோரின் தங்குமிடம் நரகமாகும். தங்குவதற்கு அது மிகக் கெட்ட இடமாகும்.
  99. ஆயினும் ஆடவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியவர்களுள் எவர்(கள்) உண்மையிலேயே பலவீனர்களாகவும், எந்த திட்டத்தின் படியும் செயலாற்ற இயலாதவர்களாகவும், எந்த வழிவகையையும் காணாதவர்களாகவும் இருந்தார்களோ,
  100. அத்தகையவர்களுக்கு இறை மன்னிப்பு அருகில் உள்ளது. எனவே அல்லாஹ்வே மிகவும் கண்டும் காணாதவனும் மிக்க மன்னிப்பவனும் ஆவான்.
  101. அல்லாஹ்வின் பாதையில் இடம் பெயர்ந்து செல்பவர், பூமியில் மிகுதியான அடைக்கலமும், பொருள்வளமும் காண்பார். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும், அவனுடைய தூதருக்காகவும் இடம் பெயர்ந்தவராய் தமது வீட்டிலிருந்து வெளியேறியப் பின்னர் மரணமடைந்தால் நிச்சயமாக அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு14
  102. நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்பத்திற்காளாக்கக்கூடும் என்று நீங்கள் அஞ்சினால், நாட்டில் நீங்கள் பயணம் செய்யும்போது, தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்களுக்குக் குற்றமில்லை42 நிச்சயமாக நிராகரிப்பவர்கள் உங்களுக்கு (மிகவும்) வெளிப்படையான பகைவராவர்.
  103. நீர் அவர்களுடனிருந்து அவர்களுக்குத் தொழுகையினை நடத்தி வைக்கும்போது அவர்களுள் ஒரு பகுதியினர் உம்முடன் நின்று தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அவர்கள் ஸஜ்தா செய்துவிட்டால் அவர்கள் உங்களுக்குப் பின்புறம் (பாதுகாப்பிற்காக) நின்று கொள்ளவேண்டும். பின்னர் தொழாதிருந்த மற்றொரு பகுதியினர் (முன்) வந்து உம்முடன் தொழவேண்டும். இவர்களும் தங்கள் பாதுகாப்பிற்குரிய வழிவகைகளைச் செய்து தங்கள் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் ஆயுதங்களை ஏந்தாமலும், உங்கள் பொருள்களை கவனிக்காமலும், இருந்திருந்தால் திடீரென உங்களைத் தாக்கியிருக்கலாமே என்று நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். மழையின் காரணமாக உங்களுக்குத் துன்பம் இருந்தாலோ, நீங்கள் நோயாளியாக இருந்தாலோ உங்கள் ஆயுதங்களைக் கழற்றி விடுவதில் உங்களுக்கு எந்த குற்றமுமில்லை என்றாலும் நீங்கள் (எப்போதும்) உங்களின் தற்காப்பு வழிகளைச் செய்து கொள்ளவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவுபடுத்தக் கூடிய தண்டனையை ஏற்படுத்தியுள்ளான்.
  104. நீங்கள் தொழுகையினை நிறைவேற்றிவிட்டால் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும், ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். பின்னர் நீங்கள் (அபாயத்திலிருந்து நீங்கி) பாதுகாப்புப் பெற்று விட்டால், தொழுகையினை (முறைப்படி) நிறைவேற்றுங்கள்.43 நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கை கொண்டவர்கள் (முறைப்படி) குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகும்.
  105. நீங்கள் (எதிரிகளாகிய) அம்மக்களைத் தேடுவதில் தளர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறதென்றால், உங்களுக்கு துன்பம் ஏற்படுவது போன்றே அவர்களுக்கும் துன்பம் ஏற்படுகிறது. (இறையருள், கருணை ஆகியவை) அல்லாஹ்விடமிருந்து (கிடைக்கும் என) நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள். ஆனால் அவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. மேலும் அல்லாஹ் நன்கு அறிபவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். ரு15
  106. நாம் உமக்குக் கற்றுத் தந்ததைக் கொண்டு மக்களிடையில் தீர்ப்பு வழங்குவதற்காக, நிச்சயமாக நாமே உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். நீர் நம்பிக்கைத் துரோகிகளுக்காக வாதாடவேண்டாம்.
  107. அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனும் ஆவான்.
  108. தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்களின் சார்பாக நீர் வாதிட வேண்டாம். நிச்சயமாக நம்பிக்கைத் துரோகிகளையும் பெரும் பாவிகளையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
  109. அவர்கள் மக்களிடமிருந்து மறைத்துக் கொள்ள விரும்புகினறனர். அல்லாஹ்விடமிருந்து மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவன் விரும்பாதவை பற்றிச் சூழ்ச்சி செய்வதில் அவர்கள் இரவைக் கழிக்கும்போது கூட, அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை சீரழிப்பவனாவான்.
  110. தெரிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்காக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுவோர் நீங்களே, ஆனால் மறுமை நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதிடுபவரோ, அவர்களின் பாதுகாவலராக இருப்பவரோ எவர்?
  111. மேலும் ஒருவர் தீமை செய்யவோ, தமக்கு தாமே தீங்கிழைக்கவோ செய்த பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பைக் கோரினால் அவர் அல்லாஹ்வை மிக்க மன்னிப்போனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகக் காண்பார்.
  112. மேலும் பாவம் செய்யும் ஒருவர் அச்செயலைத் தமக்கு எதிராகவே செய்கிறார். மேலும் அல்லாஹ் நன்கு அறிபவனும், நுண்ணறிவுடையோனுமாவன்.
  113. மேலும் ஒருவர் ஒரு தவற்றையோ, பாவத்தையோ செய்துவிட்டு, அதனைக் குற்றமற்ற ஒருவரின் மேல் சுமத்தினால், நிச்சயமாக அவர் பொய்க் குற்றச்சாட்டையும், தெளிவான பாவத்தையும் சுமக்கிறார். ரு16
  114. அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் உம்மிடத்து இல்லாதிருப்பின் (எதிரிகள் வெற்றி பெற்றிருப்பர், ஏனெனில்) அவர்களில் ஒரு பிரிவினர் உம்மை அழித்து விடுவதற்கு உறுதியான எண்ணம் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களையே தவிர வேறெவரையும் அழிப்பதில்லை. அவர்கள் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ் உம்மிடத்து வேதத்தையும், ஞானத்தையும் இறக்கி, நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுக் கொடுத்தான், அல்லாஹ்வின் (மா)பெரும் அருள் உம்மிடத்து உள்ளது.
  115. தருமச் செயல்களையோ, நற்காரியங்களையோ, மக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதையோ கொண்டு ஏவுகின்றவர்க(ளின் ஆலோசனை) களைத் தவிர்த்து, அவர்களின் ஆலோசனைகளுள் பெரும்பாலானவற்றில் எந்த நன்மையுமி(ருப்பதி)ல்லை. அல்லாஹ்வின் திருப்திகளைப் பெறுவதற்காக, அதனைச் செய்பவருக்கு நாம் மிக விரைவில் மகத்தான நற்பலனை வழங்குவோம்.
  116. நேர்வழி தமக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னர் இத்தூதரை எதிர்த்து நம்பிக்கை கொண்டோருடையதல்லாத வழியைப் பின்பற்றுகின்றவரை, நாம் அவர் செல்லும் வழியிலே அவரைச் செல்ல விட்டு,44 அவரை நரகில் நுழையச் செய்வோம். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். ரு17
  117. அல்லாஹ் தனக்கு இணையாக எதையும் ஆக்கிக் கொள்வதை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். இதை விடக் குறைந்ததை, தான் நாடியவருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு எதையாவது இணையாக ஆக்குகின்றவன் (நேரான பாதையிலிருந்து) வெகுதூரம் சென்று விட்டான். (எனப் புரிந்துகொள்க)
  118. அவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அழைப்பவை உயிரற்றவையே.45 (உண்மையில்) அவர்கள் அழைப்பது விரட்டப்பட்ட ஷய்த்தானை அன்றி வேறில்லை.
  119. அல்லாஹ் (ஷய்த்தானாகிய) அவனைத் (தன்னிடமிருந்து) தூர விலக்கிவிட்டான். அவன் நிச்சயமாக நான் உனது அடியார்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரை எடுத்துக் கொள்வேன் என்று சொன்னான்.
  120. மேலும் நிச்சயமாக நான் அவர்களைக் கண்டிப்பாக வழி கெடுப்பேன். அவர்களுக்குக் கண்டிப்பாக பேராசைகளையும் ஏற்படுத்துவேன். அவர்கள் கால்நடைகளின் காதுகளைத் துண்டிக்குமாறும் அவர்களுக்குக் கட்டளையிடுவேன். இறைவனுடைய படைப்பில் மாற்றத்தை உண்டாக்குமாறும் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்47 (என்றும் கூறினான்). அல்லாஹ்வை விட்டு விட்டு ஷய்த்தானை நண்பனாக்கிக் கொள்கின்றவன், தெளிவான இழப்பிற்காளாகி விட்டான் (எனப் புரிந்து கொள்ளுங்கள்.)
  121. (ஷய்த்தானாகிய) அவன் அவர்களிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து, அவர்களுக்கு வீண் ஆசைகளை உருவாக்குகின்றான். ஷய்த்தான் ஏமாற்றத்தைத் தவிர (வேறெதனையும்) அவர்களிடம் வாக்களிப்பதில்லை.
  122. இத்தகையோரின் தங்குமிடம் நரகம் தான். அவர்கள் அதிலிருந்து தப்பி ஓட யாதொரு வழியையும் காணமாட்டார்கள்.
  123. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றவர்களை நாம் நிச்சயமாக கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்களில் நுழையச் செய்வோம். (அவர்கள்) அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. மேலும் அல்லாஹ்வை விட சொல்லில் மிக உண்மையானவன் எவன்?
  124. உங்களின் விருப்பங்களின் படியோ, வேதத்தையுடையோரின் விருப்பங்களின் படியோ அது நடப்பதில்லை. (மாறாக) தீமையைச் செய்கின்றவருக்கு அதற்கேற்ற கூலி வழங்கப்படும். அல்லாஹ்வையன்றி எவரையும் அவர் தமக்கு நண்பராகவும், உதவியாளராகவும் காணமாட்டார்.
  125. மேலும் நம்பிக்கையாளரென்ற நிலையில் நற்செயல்களைச் செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்பட மாட்டாது.
  126. தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்து, நன்மை செய்பவராகி சாந்தியின் வடிவாகத் திகழ்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவரை விட அழகான மார்க்கத்தையுடையவர் யார்? மேலும் அல்லாஹ் இப்ராஹீமைத் தன் நெருங்கிய நண்பராக ஆக்கிக் கொண்டான்.
  127. வானங்கள், பூமியிலுமுள்ளவை (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியன. மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறான்.48 ரு18
  128. மேலும் அவர்கள் உம்மிடம் (ஒருத்தியை விட அதிகமான) பெண்களை (மணந்து கொள்வது) பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அல்லாஹ் அவர்களைக் குறித்து உங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளான். (இவ்) வேத நூலில் (மற்றோரிடத்தில்)49 உங்களுக்கு ஓதிக் காட்டப்பட்ட அக்கட்டளை அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். நீங்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை50 அவர்களுக்கு கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள விரும்புகிறீர்கள். மேலும் அது சிறுமிகளுள்51 பலவீனமானவர்களைப்52 பற்றியதாகும். அநாதைகளுடன் நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் (என்றுமே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் நீங்கள் எந்த நற்செயலைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
  129. தனது கணவன் தன்னைக் கொடுமைப்படுத்துவான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ எந்தப் பெண்ணாவது அஞ்சினால் அவர்கள் இருவரும் தக்க முறையில் தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில்53 அவர்கள் இருவருக்கும் எந்தக் குற்றமுமில்லை. சமாதானம் ஏற்படுத்துவதே சிறந்தது. மக்களின் இயல்பில்54 கருமித்தன(த்திற்கான எண்ண)ம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் நற்செயல் செய்து இறையச்சத்தை மேற்கொண்டால் நீங்கள் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தெரிந்து கொள்வான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்).
  130. மேலும் நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியருக்கு இடையில் சமநிலையில் நடந்து கொள்ள உங்களால் ஒருபோதும் இயலாது என்றாலும் ஒருத்தியின் பக்கமே முற்றிலும் சாய்ந்து மற்றொருத்தியை அந்தரத்தில் தொங்க விடாதீர்கள்.55 நீங்கள் உங்களுக்கிடையே இறையச்சத்தை மேற்கொள்ளவும் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் (என்பதை நினைவிற் கொள்ளுங்கள்).
  131. மேலும் அவ்விருவரும் பிரிந்து விட்டால், அல்லாஹ் தன் பெரும் வளத்தால் அவ்விருவரையும் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான். அல்லாஹ் வளம் நிறைந்தவனும், நுண்ணிய ஞானம் உள்ளவனும் ஆவான்.
  132. மேலும் வானங்களிலும், பூமியிலுமுள்ளவை (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியன. நீங்கள் அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுங்கள் என உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் நாம் வலியுறுத்திக் கட்டளையிட்டிருந்தோம். நீங்கள் நிராகரித்துவிட்டால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியனவாகும் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும், எல்லாப் புகழுக்கும் உரியவனுமாவான்.
  133. மேலும் வானங்களிலும், பூமியிலுமுள்ளவை (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியன. மேலும் பாதுகாப்பாளனாக விளங்க அல்லாஹ்வே போதுமானவன்.
  134. மக்களே! அவன் விரும்பினால், உங்களை அழித்துவிட்டு, வேறு மக்களை கொண்டுவந்து விடுவான். மேலும் அல்லாஹ் அவ்வாறு செய்ய முழு ஆற்றல் பெற்றவனாவான்.
  135. இந்த உலகிற்குரிய கூலியினை விரும்புகின்றவர், அல்லாஹ்விடம் இந்த உலகிற்குரியதும், மறு உலகிற்குரியதுமான (இருவகை) கூலியும் உள்ளன (என்பதை நினைவில் கொள்ளட்டும்). அல்லாஹ் நன்கு கேட்பவனும், பார்ப்பவனுமாவான். ரு19
  136. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவதில் நிலைத்திருங்கள். உங்கள் சாட்சியம் உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாயிருங்கள். (யாருக்காக சாட்சி கூறப்பட்டதோ) அவர் செல்வராயினும், ஏழையாயினும் சரி. அல்லாஹ் அவ்விருவருக்கும் (உங்களைவிட) அதிக அளவில் நன்மையை விரும்பக்கூடியவன் ஆவான். நீங்கள் அற்ப ஆசைகளைப் பின்பற்றாதீர்கள். அப்போதுதான் நீங்கள் நேர்மையுடன் செயல்பட முடியும். நீங்கள் (சாட்சியை) மறைத்தாலோ, (உண்மை வெளிப்படுத்துவதிலிருந்து) ஒதுங்கிக் கொண்டாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிகிறான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
  137. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதரிடத்தும், அவன் தன் தூதருக்கு இறக்கிய இவ்வேதத்திடத்தும், இதற்கு முன்னர் அவன் இறக்கிய வேதத்திடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றவன் மிகவும் மோசமான தவறான வழியில் சென்றுவிட்டான் (எனப் புரிந்து கொள்ளுங்கள்).
  138. நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துப் பின்னர் நம்பிக்கை கொண்டு அதன் பின்னரும் நிராகரித்துப் பின்னர் நிராகரிப்பில் (மேலும்) முன்னேறிவிடுகின்றவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். அவர்களுக்கு (ஈடேற்றத்திற்குரிய) எந்த வழியையும் காட்டவும் மாட்டான்.
  139. நயவஞ்சகர்களுக்கு வேதனை மிக்க ஆக்கினை உள்ளது என்ற செய்தியை நீர் அவர்களுக்குத் தெரிவிப்பீராக.
  140. (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை விட்டுவிட்டு, நிராகரிப்பவர்களை(த் தங்கள்) நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அவர்கள் இவர்களிடம் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? (அவ்வாறாயின்) கண்ணியமனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது (என்பதனை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்).
  141. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து ஏளனம் செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் (இகழ்கின்ற) அவர்கள் அதனைவிட்டு வேறேதாவது பேச்சில் ஈடுபடாத வரை நீங்கள் அவர்களுடன் அமராதீர்கள். நீங்கள் அவ்வாறு இருப்பீர்களாயின் அவர்களைப் போன்றவர்களா(கவே கருதப்படு)வீர்கள் என இவ்வேதத்தில் அவன் உங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பவர்களையும் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
  142. (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் உங்களைக் குறித்து (அழிவை) எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஏதாவது வெற்றி கிடைத்தால் அவர்கள் (உங்களிடம்) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? எனக் கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு (வெற்றியில்) ஏதாவதொரு பங்கு கிடைத்தால், (அவர்களிடம்) நாங்கள் (முன்னர் ஒருமுறை) உங்களை விட மேலோங்கியிருந்தோம், நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து உங்களை நாங்கள் காப்பாற்றவில்லையா?56 என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கிடையில் மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக நிராகரிப்பவர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் வெற்றி கொடுக்க மாட்டான். ரு20
  143. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களுடைய ஏமாற்றுதலுக்கு தண்டனை அளிப்பான். மேலும் அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது சோம்பி நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்குக் காட்டு(வதற்காக தொழு)கின்றனர். மேலும் அல்லாஹ்வை குறைவாகவே நினைவு கூறுகின்றனர்.
  144. அவர்கள் (இறைவனை நினைவு கூர்வதற்கும். கவனமற்றிருப்பதற்கும் ஆகிய) இரண்டிற்குமிடையில் தடுமாறுகின்றனர். அவர்கள் இ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்களுடனுமில்லை; அ(ந்த நிராகரிப்ப)வர்களுடனுமில்லை. அல்லாஹ் அழிக்க நாடுபவனுக்கு (ஈடேற்றத்திற்குரிய) எந்த வழியையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர்.
  145. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களை விட்டுவிட்டு நிராகரிப்பவர்களை (உங்களுடைய) நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்களுக்கு எதிராக மிகத்தெளிவான குற்றச்சாட்டி(னைச் சுமத்துவத)ற்குரிய வாய்ப்பை அல்லாஹ்வுக்குக் கொடுக்க விரும்புகின்றீர்களா?
  146. நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரக ஆழத்தின் அடிமட்டத்தில் இருப்பர். அவர்களுக்கு உதவி செய்பவராக (எவரையும்) நீர் ஒருபோதும் காணமாட்டீர்.
  147. பாவமன்னிப்புக்கோரி, சீர்திருந்தி அல்லாஹ்விடம் (தங்கள்) பாதுகாப்பை விரும்பித் தங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கென்று கலப்பற்றதாக்கிக் கொண்டவர்கள் (மேற் கூறப்பட்டவர்களிலிருந்து) விதிவிலக்கானவர்கள். ஆகவே இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சேர்ந்தவர்களாவர். அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு விரைவில் மகத்தான நற்பலனை வழங்குவான்.
  148. நீங்கள் நன்றி செலுத்தி, நம்பிக்கையும் கொள்வீர்களாயின் உங்களைத் தண்டிப்பதில் அல்லாஹ்விற்கு என்ன கிடைக்கப்போகிறது? அல்லாஹ் மதிக்கக் கூடியவனும் நன்கு அறிபவனும் ஆவான்.
  149. தீயவற்றைப்‌ பகிரங்கமாகக்‌ கூறுவதை அல்லாஹ்‌ விரும்புவதில்லை. ஆயினும்‌ அநீதியிழைக்கப்‌பட்டவரைத்‌ தவிர (அவர்கள்‌ அநீதியை வெளிப்படுத்தலாம்‌). மேலும்‌ அல்லாஹ்‌ நன்கு கேட்பவனும்‌ நன்கு அறிபவனுமாவான்‌.  
  150. நீங்கள்‌ ஏதேனும்‌ நன்மையை வெளிப்படுத்தினாலோ அல்லது அதை மறைத்து வைத்தாலோ அல்லது (ஒருவருடைய) தீமையை மன்னித்‌தாலோ நிச்சயமாக அல்லாஹ்‌ மிக்க மன்னிப்பவனும்‌ பேராற்றல்‌ பெற்றவனும்‌ ஆவான்‌ (என்பதனைத்‌ தெரிந்து கொள்ளுங்கள்‌).  
  151. அல்லாஹ்வையும்‌ அவனுடைய தூதர்களையும்‌ நிராகரித்து மேலும்‌ அல்லாஹ்வுக்கும்‌ அவனுடைய தூதர்களுக்குமிடையில்‌ வேற்றுமை பாராட்ட எண்ணி, மேலும்‌ (தூதர்‌ களுள்‌) சிலரை நாங்கள்‌ ஏற்றுக்‌ கொள்வோம்‌ மற்றுஞ்‌சிலரை நிராகரிப்போம்‌ எனவும்‌ கூறி, இதற்கிடையில்‌ ஏதேனுமொரு வழியைத்‌ தேர்ந்தெடுத்துக்‌ கொள்ள விரும்புகின்றவர்கள்‌.  
  152. உண்மையில்‌ இவர்களே முற்றிலும்‌ நிராகரிப்பவர்களாவர்‌. மேலும்‌ நிராகரிப்பவர்களுக்கு இழிவுபடுத்தக்‌ கூடிய தண்டனையை நாம்‌ ஏற்படுத்தியுள்ளோம்‌. 
  153. மேலும்‌ அல்லாஹ்விடத்தும்‌ அவனுடைய தூதர்களிடத்தும்‌ நம்பிக்கை கொண்டு (தூதர்‌ களாகிய) அவர்களுள்‌ எவருக்கி டையிலும்‌ வேற்றுமை பாராட்டாதவர் களுக்கு, அவர்களின்‌ நற்பலன்களை விரைவிலேயே அவன்‌ வழங்குவான்‌. மேலும்‌ அல்லாஹ்‌ மிக்க மன்னிப்பவ னும்‌ மேன்மேலும்‌ கருணை காட்டு பவனுமாவான்‌. 
  154. வேதத்தையுடையவர்கள்‌ உம்மிடத்தில்‌, நீர்‌ அவர்களுக்கு வானத்திலிருந்து வேதமொன்றை இறக்குமாறு கேட்கின்றனர்‌. (அதில்‌ நீர்‌ ஆச்சரியம்‌ கொள்ள வேண்டாம்‌.) அவர்கள்‌ மூஸாவிடம்‌ இதனை விடப்‌ பெரியதைக்‌ கேட்டனர்‌. அவர்கள்‌ (அவரிடம்‌), நீர்‌ எங்களுக்கு அல்லாஹ்வை வெளிப்படையாகக்‌ காட்டும்‌ எனக்‌ கூறினர்‌. அப்போது அவர்களது அக்கிரமத்தின்‌ காரணத்தால்‌, அழிவையுண்டாக்கக்‌ கூடிய தண்டனை அவர்களைப்‌ பற்றிக்‌ கொண்டது. அவர்களிடம்‌ மிகத்‌ தெளிவான அடையாளங்கள்‌  வந்த பின்னும்‌ அவர்கள்‌ கன்றுக்‌ குட்டியினை (த்‌ தங்களின்‌ கடவுளாக) வைத்துக்‌ கொண்டனர்‌. பின்னர்‌ நாம்‌ இதனையும்‌) மன்னித்து விட்டோம்‌. மேலும்‌ நாம்‌ மூஸாவுக்கு (மிகத்‌) தெளிவான வெற்றியை வழங்கி னோம்‌.  
  155. மேலும்‌ நாம்‌ அவர்களிடம்‌ (உறுதியான) உடன்படிக்கை வாங்கும்‌ வேளையில்‌ மலையை அவர்களுக்கு மேல்‌ உயர்ந்திருக்கச்‌ செய்தோம்‌. (அதாவது அவர்கள்‌ மலையின்‌ அடிவாரத்தில்‌ இருக்குமாறு செய்யப்பட்டது). மேலும்‌ நாம்‌ அவர்களிடம்‌: நீங்கள்‌ இந்த வாயிலில்‌  முற்றிலும்‌ கட்டுப்பட்டவர்களாக நுழையுங்கள்‌ எனக்‌ கூறினோம்‌.  மேலும்‌ நாம்‌ அவர்களிடம்‌: ஸப்த்‌ (சனிக்கிழமை விஷயத்‌)தில்‌ வரம்பு மீறாதீர்கள்‌ என்றும்‌ கூறினோம்‌.  மேலும்‌ நாம்‌ அவர்களிடம்‌ உறுதியான  ஒர்‌ உடன்படிக்கையினைப்‌ பெற்றிருந்‌ தோம்‌.  
  156. பின்னர்‌ அவர்கள்‌ தங்கள்‌ உடன்படிக்கையை முறித்து; அல்லாஹ்வின்‌ வசனங்களை அவர்கள்‌ மறுத்து; காரணமின்றி அவர்கள்‌ நபிமார்களைக்‌ கொல்ல முயன்றது58 எங்கள்‌ உள்ளங்கள்‌ திரையிடப்பட்டிருக்கின்றன என்று அவர்கள்‌ கூறியது (மட்டும்‌) இல்லை; இன்னும்‌ கூறுவதாயின்‌, அவர்களின்‌ நிராகரிப்பின்‌ காரணத்தால்‌ அவற்‌றின்‌ மீது அல்லாஹ்‌ முத்திரையிட்டு விட்டான்‌. எனவே, அவர்கள்‌ முற்றிலும்‌ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்‌.    
  157. மேலும்‌, அவர்கள்‌ நிராகரித்ததனாலும்‌, மர்யமின்‌ பேரில்‌ அவர்கள்‌ (மா)பெரும்‌ அவதூறு கூறியதாலும்‌, 
  158. நிச்சயமாக நாங்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ மர்யமின்‌ மகன்‌ ஈஸா மஸீஹைக்‌ கொன்று விட்டோம்‌ என்ற அவர்களின்‌ கூற்றினாலும்‌ (இத்தண்டனை அவர்களுக்குக்‌ கிடைத்தது.) அவர்கள்‌ அவரைக்‌ கொலை செய்யவுமில்லை; அவர்கள்‌ அவரைச்‌ சிலுவையில்‌ அறைந்து கொல்லவுமில்லை. மாறாக அவர்‌ அவர்களுக்கு (சிலுவையில்‌ இறந்தவரைப்‌ போன்று) சந்தேகத்திற்குரிய வராக ஆக்கப்பட்டார்‌.59 (ஈஸா சிலுவையிலிருந்து உயிருடன்‌ இறக்கப்பட்டதில்‌) கருத்து வேறுபாடு கொண்டவர்கள்‌ அ(வர்‌ உயிரோடு இறக்கப்பட்ட)தில்‌ நிச்சயமாக சந்தேகத்திலேயே இருக்கின்றனர்‌. அவர்களுக்கு அது தொடர்பாக எந்தவோர்‌ (உறுதியான) அறிவும்‌ இல்லை. ஆயினும்‌ யூகத்தை60 (மட்டுமே) அவர்கள்‌ பின்பற்றிச்‌ செல்கின்றனர்‌. அவர்கள்‌ இதை (சம்பவத்தின்‌ உண்மையை) முழுமை யாகப்‌ புரிந்து கொள்ளவில்லை.61  (அவர்கள்‌ புரிந்தது தவறாகும்‌.)   
  159. மாறாக, அல்லாஹ்‌ அவருக்‌குத்‌ தன்னிடம்‌ உயர்வைக்‌ கொடுத்‌தான்‌. (அவர்‌ சிலுவையில்‌ மரணிக்க வில்லை.) மேலும்‌ அல்லாஹ்‌ வல்லவனும்‌ நுண்ணறிவுள்ளவனும்‌ ஆவான்‌.  
  160. வேதம்‌ கிடைக்கப்‌ பெற்றவர்‌களில்‌ ஒருவர்‌ கூடத்‌ தனது மரணத்‌ திற்கு முன்னர்‌ இ(ந்‌)த (சம்பவத்தி)ன்‌ மீது ஈமான்‌ கொள்ளாமல்‌ இருக்க மாட்டார்‌.63 மேலும்‌ அவர்‌ மறுமை நாளில்‌ அவர்களுக்கு (எதிராகச்‌) சாட்சியாக இருப்பார்‌.  
  161. எனவே யூதர்களின்‌ அநீதி காரணத்தால்‌, (முன்னர்‌) அவர்‌ களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை நாம்‌ அவர்‌ களுக்கு ஆகாதவையாக ஆக்கி விட்டோம்‌.64 மேலும்‌ அல்லாஹ்வின்‌ வழியிலிருந்து பெரும்பாலானவர்‌களைத்‌ தடுத்ததன்‌ காரணத்தாலும்‌ (இத்தண்டனை அவர்களுக்குக்‌ கிடைத்தது).    
  162. மேலும்‌ அவர்களுக்கு வட்டித்‌ தொழில்‌ தடுக்கப்பட்டிருந்தும்‌?65  அவர்கள்‌ அதனை வாங்குவதும்‌,  மக்களுடைய பொருள்களை நியாய மின்றி விழுங்குவதும்‌ (இத்தண்ட  னைக்குக்‌ காரணமாயிற்று). மேலும்‌  நாம்‌ அவர்களுள்‌ நிராகரிப்பவர்‌ களுக்கு வேதனையளிக்கக்கூடிய  தண்டனையை ஏற்படுத்தியுள்ளோம்‌.    
  163. ஆனால்‌ (யூதர்களாகிய) அவர்களுள்‌ உறுதியான ஞானம்‌ பெற்றவர்கள்‌ உமக்கு இறக்கப்பட்ட தையும்‌ உமக்கு முன்னர்‌ இறக்கப்‌ பட்டதையும்‌ நம்பும்‌ நம்பிக்கையாளர்‌கள்‌ (அதாவது முஸ்லிம்கள்‌), (சிறப்பாக) தொழுகையைச்‌ சரிவர நிறைவேற்றவும்‌ ஸக்காத்து கொடுக்கவும்‌, அல்லாஹ்வையும்‌, இறுதி நாளையும்‌ நம்பவும்‌ செய்பவர்கள்‌ ஆகிய இவர்களுக்குக்‌ கட்டாயமாக நாம்‌ (மா)பெரும்‌ நற்பலனை வழங்குவோம்‌. ரு22
  164. நிச்சயமாக நாம்‌, நூஹாக்‌  கும்‌ அவருக்குப்‌ பின்னர்‌ (மற்ற) தூதர்‌  களுக்கும்‌ வஹியை (இறையறிவிப்‌  பினை) அருளியது போன்று,  நிச்சயமாக நாம்‌ உமக்கு(ம்‌) வஹியை  அருளினோம்‌. மேலும்‌ இப்ராஹீம்‌,  இஸ்மாயீல்‌, இஸ்ஹாக்‌, யஃகூப்‌  (இவருடைய) சந்ததிகள்‌ (மற்றும்‌)  ஈஸா, அய்யூப்‌, யூனுஸ்‌, ஹாரூன்‌,  சுலைமான்‌ ஆகியவர்களுக்கும்‌ நாம்‌  வஹியை அருளினோம்‌. மேலும்‌, நாம்‌  தாவூதுக்கு சங்கீதத்தை வழங்கி னோம்‌.    
  165. ஏற்கனவே நாம்‌ உமக்குத்‌ தெரிவித்த தூதர்கள்‌ பலர்‌ உள்ளனர்‌.  இன்னும்‌ உமக்கு, நாம்‌ தெரிவிக்காத  தூதர்கள்‌ பலர்‌ உள்ளனர்‌. மேலும்‌  அல்லாஹ்‌ மூஸாவிடம்‌ மிகவும்‌  நன்றாக உரையாடினான்‌.    
  166. இத்தூதர்களுக்குப்‌ பின்னர்‌, மக்கள்‌ அல்லாஹ்வின்‌ மீது எவ்விதக்‌ குற்றச்சாட்டும்‌ செய்யாமல்‌ இருப்ப தற்காக நற்செய்தியாளர்களும்‌ எச்சரிக்கை செய்பவர்களுமான தூதர்களை அனுப்பினோம்‌. மேலும்‌,  அல்லாஹ்‌ வல்லோனும்‌ ஞானமுள்ள வனுமாவான்‌.    
  167. ஆனால்‌ அல்லாஹ்‌ உமக்கு இறக்கியதைக்‌ கொண்டு, அதனைத்‌ தன்‌ ஞானத்துடன்‌ இறக்கினான்‌ என்பதற்கு சாட்சி கூறுகின்றான்‌.  வானவர்களும்‌ சாட்சி கூறுகின்றனர்‌.  மேலும்‌ அல்லாஹ்வின்‌ சாட்சியே எல்லாவற்றையும்‌ விட முதன்மை யானதாகும்‌.  
  168. நிராகரித்து அல்லாஹ்வின்‌ வழியிலிருந்து (மக்களைத்‌) தடுக்கின்றவர்கள்‌ நிச்சயமாக வழிதவறி நெடுந்தொலைவில்‌ சென்று விட்டவர்கள்‌ ஆவர்‌.  
  169. நிராகரித்ததுடன்‌ அநீதியும்‌ இழைத்தவர்களை அல்லாஹ்‌ ஒருபோதும்‌ மன்னிக்க மாட்டான்‌. மேலும்‌ அவர்களுக்கு எந்த வழியை யும்‌ காட்ட மாட்டான்‌.  
  170. நரகின்‌ வழியை அன்றி; அதில்‌ (நீண்ட) நெடுங்காலம்‌ வரை தங்குவார்கள்‌. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.  
  171. மனிதர்களே! இத்தூதர்‌ உங்களிடம்‌ உங்கள்‌ இறைவன்‌ புறம்‌ இருந்து உண்மையுடன்‌ வந்துள்ளார்‌. எனவே நீங்கள்‌ நம்பிக்கை கொள்‌ ளுங்கள்‌. (இது) உங்களுக்கு மிக நல்லது. நீங்கள்‌ நிராகரிப்பீர்களா யின்‌, வானங்களிலும்‌ பூமியிலுள்ள வையெல்லாம்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ விற்குரியயவையே (என்பதை நினைவில்‌ கொள்ளுங்கள்‌). மேலும்‌ அல்லாஹ்‌ நன்கு அறிபவனும்‌ நுண்ணிய ஞானமுள்ளவனுமாவான்‌.  
  172. வேதத்தையுடையவர்களே!66 நீங்கள்‌ உங்கள்‌ மார்க்க (விஷய)த்தில்‌ வரம்பு மீறாதீர்கள்‌. அல்லாஹ்வைப்‌ பற்றி உண்மையைத்‌ தவிர வேறெதனையும்‌ கூறாதீர்கள்‌. நிச்சயமாக மர்யமின்‌ மகன்‌ ஈஸா மஸீஹ்‌ அல்லாஹ்வின்‌ (ஒரு) தூதரும்‌, அவன்‌ மர்யமுக்கு அருளிய அவனது நற்செய்தியுமாவார்‌.67 மேலும்‌ அவனிடமிருந்துள்ள ஓர்‌ அருளும்‌ ஆவார்‌. எனவே நீங்கள்‌ அல்லாஹ்விடத்தும்‌, அவனுடைய எல்லாத்‌ தூதர்களிடத்தும்‌ நம்பிக்கை கொள்ளுங்கள்‌. (கடவுள்‌) மூன்று எனக்‌ கூறாதீர்கள்‌. (அவ்வாறு கூறுவதிலிருந்து) விலகிக்‌ கொள்ளுங்கள்‌. இது உங்களுக்கு நல்லது. நிச்சயமாக வணக்கத்‌ திற்குரிய ஒருவன்‌ அல்லாஹ்‌ மட்டுமே. அவனுக்கு மகன்‌ உண்டு என்பது அவனது தூய்மைக்கு அப்பாற்பட்டது. வானங்களிலுள்‌ளவை பூமியிலுள்ளவை (எல்லாம்‌) அவனுக்கே உரியனவாகும்‌. மேலும்‌ அல்லாஹ்வின்‌ பாதுகாப்பிற்குப்‌ பிறகு வேறு எவருடைய பாதுகாப்பும்‌ தேவையில்லை. ரு23
  173. நிச்சயமாக மஸீஹும்‌, (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான வானவர்களும்‌, அல்லாஹ்வின்‌ ஓர்‌ அடியாரா(க எண்ணப்படு)வதை ஒருபோதும்‌ அற்பமாகக்‌ கருத மாட்டார்கள்‌. மேலும்‌ அவனை வணங்குவதை அற்பமாகக்‌ கருதி பெருமை பாராட்டுபவர்கள்‌ எல்லாரையும்‌ அவன்‌ தன்னிடத்தில்‌ ஒன்று சேர்ப்பான்‌.  
  174. பின்னர்‌ நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச்‌ செய்தவர்களுக்கு, அவர்களின்‌ நற்பலன்களை முழுமையாக வழங்குவதுடன்‌ அவன்‌ தனது அருளிலிருந்து, அவர்களுக்கு மிகுதியாக வழங்குவான்‌. ஆனால்‌ அற்பமாக நினைக்கவும்‌ பெருமை கொள்ளவும்‌ செய்கின்றவர்களுக்கு அவன்‌ வேதனையளிக்கக்‌ கூடிய தண்டனையைக்‌ கொடுப்பான்‌. அவர்கள்‌ அல்லாஹ்வையன்றி (வேறெவரையும்‌) தங்களுக்கு நண்பராகவும்‌ உதவியாளராகவும்‌ காண மாட்டார்கள்‌.  
  175. மக்களே! உங்கள்‌ இறைவ னிடமிருந்து உங்களுக்குத்‌ தெளிவானதொரு சான்று வந்து விட்டது. மேலும்‌ நாம்‌ உங்களுக்குத்‌ தெளிவான ஒர்‌ ஒளியினையும்‌ இறக்கியுள்ளோம்‌.  
  176. எனவே அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொண்டு அதன்‌ மூலமாக தங்களைக்‌ காப்பாற்றிக்‌ கொண்டவர்‌களை, நிச்சயமாக அவன்‌ தன்னுடைய பெருங்‌ கருணையிலும்‌ பெரும்‌ அருளிலும்‌ நுழையச்‌ செய்வான்‌. மேலும்‌ தன்‌ பக்கம்‌ வரக்‌  கூடிய நேரான வழியினை  அவர்களுக்குக்‌ காட்டுவான்‌.    
  177. அவர்கள்‌ உம்மிடம்‌ ஒரு முடிவைக்‌ கேட்கின்றனர்‌. நீர்‌  கூறுவீராக: அல்லாஹ்‌ உங்களுக்குக்‌  கலாலா68 பற்றிய முடிவான  கருத்தைத்‌ தெரிவிக்கின்றான்‌.  பிள்ளைகள்‌ இல்லாமல்‌ இறந்த  ஒருவனுக்கு உடன்‌ பிறந்தவள்‌  இருந்தால்‌, அவன்‌ விட்டுச்‌ சென்ற  (சொத்‌)தில்‌ பாதி அவளுக்குக்‌  கிடைக்கும்‌. அவளுக்கு (இறக்கும்‌  பொழுது) பிள்ளைகள்‌ இல்லை  யெனில்‌ அவன்‌ (அவளது சகோ  தரன்‌) அவளுடைய வாரிசாவான்‌.  (இறந்தவனுக்கு) இரு சகோதரிகள்‌ இருந்தால்‌, அவ்விருவருக்கும்‌ அவன்‌ விட்டுச்‌ சென்றதில்‌ மூன்றில்‌  இரண்டு பாகம்‌ உண்டு. அவர்கள்  (வாரிசுக்காரர்கள்) உடன்பிறந்த  ஆண்களும்‌ பெண்களுமாயிருந் தால்‌, ஆணுக்குரிய (பாகமான)து  இரண்டு பெண்களுக்குரிய  பாகத்திற்குச்‌ சமமானதாகும்‌. நீங்கள்‌  வழி தவறாதிருக்க (இவற்றை)  அல்லாஹ்‌ உங்களுக்கு விளக்கு கின்றான்‌. மேலும்‌ அல்லாஹ்‌ எல்லா வற்றையும்‌ நன்கு அறிகின்றான்‌.ரு24
Powered by Blogger.