அதிகாரம்: அபஸ
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள்: 43
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார்.
- அவரிடத்தில் ஒரு குருடர் வந்ததே, அதற்குக் காரணம்.
- அவன் கட்டாயம் தூயவனாக ஆகி விடக் கூடும்.
- அல்லது (படிப்பினைக்குரியவற்றை) அவன் நினைத்துப் பார்ப்பான்; அவ்வாறு நினைத்துப் பார்ப்பது அவனுக்குப் பயனளிக்கும் என்று உம்மை அறியச் செய்வது எது?
- எவன் (உண்மையை) அலட்சியம் செய்கின்றானோ,
- அவன் பால் நீர் நன்கு கவனம் செலுத்துகிறீர் (என்றிருக்க முடியுமா?)
- அவன் தூய்மையடையவில்லையென்றால் அதற்கு நீர் பொறுப்பல்ல. (என்றிருக்கும் போது, உம்மால் அவ்வாறு எப்படிச் செய்ய முடியும்?)
- ஆனால் எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ,
- மேலும் எவர் (இறைவனுக்கும்)அஞ்சுகிறாரோ,
- அவரை நீர் கவனிக்கவில்லையாம்.ஒரு போதும் அவ்வாறன்று. (இக்குற்றச் சாட்டுகளெல்லாம் தவறானவையாகும்.)
- நிச்சயமாக (குர்ஆனாகிய)இது ஓர் அறிவுரையாகும்.
- எனவே எவர் விரும்புவாரோ அவர் இதனை நினைவில் கொள்ளட்டும்.
- (இந்தக் குர்ஆன்) கண்ணியதிற்கு(ம்)ரிய (நூல்களில் உள்ளது),
- மேன்மைக்கும் தூய்மைக்கும் உரிய நூல்களில் உள்ளது.
- (எழுதுபவர் மற்றும் நெடுந்தொலைப்)பயணிகளில் கைகளில் உள்ளது.
- அது கண்ணிய மிகு, நன்மைமிக்கவர்களின் (கைகளில் உள்ளது)
- மனிதனுக்கு அழிவே! அவன் எந்த அளவிற்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான்!
- அவன் (அதாவது இறைவன்) எந்தப் பொருளில் இருந்து அவனைப் படைக்கின்றான்?
- ஒரு விந்துத் துளியிலிருந்து! அவன் அவனை படைக்கின்றான். அவனு(டைய முன்னேற்றத்து)க்கு ஒரு மதிப்பீட்டை ஏற்படுத்துகின்றான்.
- பின்னர் அவன் அவனுக்கு வழியை எளிதாக ஆக்குகின்றான்
- பின்னர் அவன் அவனை மரணமடையச் செய்து, அவனை ஒரு கபரில் அடக்குகிறான்.
- பின்னர் அவன் விரும்பும் போது அவனை மீண்டும் எழுப்புவான்.
- ஒரு போதும் அவ்வாறன்று (அதாவது மறுமை வாழ்வு இல்லை என்று நீங்கள் நினைப்பது தவறு) அவனுக்கு (மனிதனுக்கு) இட்ட கட்டளையை இதுவரை அவன் நிறைவேற்றவில்லை.
- எனவே, மனிதன் தனது உணவை பார்க்க வேண்டும்.
- நாம் தண்ணீரை மிக அதிகமாக பொழிய செய்கின்றோம்.
- பின்னர் நாம் பூமியை ஏற்ற முறையில் நன்றாக பிளக்கின்றோம்
- பின்னர் நாம் அதில் தானியம் முளையச் செய்கின்றோம்.
- திராட்சைப் பழங்களையும் காய்கறி வகைகளையும்;
- ஆலிவ் மரத்தையும், பேரிச்ச மரத்தையும்;
- (அதனுடன்) அடர்ந்த காடுகளையும்,
- பழங்களையும், புற்பூண்டுகளையும் (முளையச் செய்கின்றோம்).
- (இவையெல்லாம்) உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பவையாகும்.
- ஆனால் காதை செவிடாக்கும் பேரொலி வரும் போது,
- மனிதன் தன் சகோதரனை விட்டும்,
- தன் தாய், தன் தந்தையை (விட்டும்),
- தன் மனைவி, தன் ஆண் மக்கள் ஆகியவர்களை விட்டும் விரைவாக ஓடும் நாளில்.
- அந் நாளில் அவர்களுள் ஒவ்வொருவருக்கும் (மற்றவரைப் பற்றி) அக்கரையற்றவனாய் இருக்குமளவுக்கு (தன்னைப்பற்றிய) கவலையிருக்கும்.
- அந்நாளில் சில (ரது) முகங்கள் ஒளி மயமானவையாகும்.
- சிரித்தவாறும், மகிழ்ச்சியடைந்த வாறும் இருக்கும்.
- மேலும் அந்நாளில் சில(ரது) முகங்களில் தூசு படிந்திருக்கும்.
- அவற்றை இருள் மூடிக்கொண்டிருக்கும்.
- இவர்களே நிராகரிப்பவர்களும் தீயவர்களுமாவார்கள். ரு1