அதிகாரம்: அர் ரஹ்மான்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்:79
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன்.
- அவன் குர்ஆனைப் கற்றுக் கொடுத்தான்.
- அவன் மனிதனைப் படைத்தான்.
- அவன் அவனுக்குத் தெளிவுரையைக் கற்றுக் கொடுத்தான்.
- சூரியனும், சந்திரனும் குறிப்பிட்ட ஒரு கணக்கின் படி (இயங்கிக் கொண்டு) இருக்கின்றன.
- செடிகளும், மரங்களும் (அவனது விருப்பத்திற்கு அடக்கத்துடன்) கீழ்ப்படிகின்றன.
- அவன் வானத்தை உயர்த்தி, நிறுவையை ஏற்படுத்தினான்.
- அளவில் நீங்கள் வரம்பு மீறாதிருப்பதற்காக (அவ்வாறு செய்தான்).
- எனவே நீங்கள் (எல்லாவற்றையும்) நேர்மையுடன் நிறுத்துக் கொடுங்கள். அளவைக் குறைக்காதீர்கள்.
- மேலும் அவன் பூமியை(த் தனது) படைப்புகளுக்காக அமைத்தான்.
- அதில் (எல்லா வகைப்) பழமும், உறைகளுடனுள்ள பேரீச்ச மரங்களும் உள்ளன.
- மேல் தோலுடைய தானியங்களும், நறுமணமுள்ள செடிகளும் உள்ளன.
- எனவே (ஜின்களும், மனிதர்களுமாகிய) நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவன் மனிதனைச் சுட்ட மட்பாண்டம் போன்ற ஒலி எழுப்பும் காய்ந்த களிமண்ணிலிருந்து படைத்தான்.
- அவன் ஜின்னைத் தீச்சுடரிலிருந்து படைத்தான்1.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவன் இரண்டு கிழக்குகளுக்கும் இறைவன்; இரண்டு மேற்குகளுக்கும் இறைவன்2.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவன் இரண்டு கடல்களை மிக நெருக்கமாகப் படைத்துள்ளான். அவை (ஒரு நாள்) இணைந்து விடும்3.
- (தற்போது) அவ்விரண்டிற்குமிடையில் தடுப்பு ஒன்று உள்ளது. இதனால் அவை வரம்பு மீறி, ஒன்றிற்குள் ஒன்று நுழைவதில்லை.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவற்றிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- மேலும் அவனுக்கு கடலில் செல்லும் மலைகள் போன்ற உயரமான கப்பல்கள் இருக்கின்றன4.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? ரு1
- (பூமியாகிய) இதன் மீது உள்ளவையெல்லாம் அழியக்கூடியவையே;
- புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் அருள் நிலைத்திருக்கும்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவர்கள் அவனிடமே(தங்கள் தேவைகளைக் ) கேட்கின்றனர். ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவன் தன்னை வெவ்வேறான தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றான்5.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- இருபெரும் சக்திகளே!6 விரைவில் நாம் உங்களிடம் வரவிருக்கின்றோம்7.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?8
- ஜின்கள், மனிதர் கூட்டத்தினரே!9 வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் செல்ல, உங்களுக்கு வலிமையிருந்தால் செல்லுங்கள்10. ஆனால் சான்று வலிமையினாலன்றி உங்களால் செல்ல இயலாது.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- புகையில்லாத தீச்சுடரும்11, தெளிவான தீச்சுவாலையும்12 உங்களுக்கெதிராக அனுப்பப்படும். எனவே உங்களாலே, உங்களுக்கு (ஒருவர், மற்றவருக்கு) ஒருபோதும் உதவி செய்ய இயலாது.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- வானம் பிளந்து, சிவப்புத் தோலைப் போன்று சிவப்பாக ஆகும் போது.(அது இறுதி முடிவின் காலமாகும்).
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அந்நாளில் மனிதனிடமோ, ஜின்னிடமோ அவனது பாவம் பற்றிக் கேட்கப்பட மாட்டாது13.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- குற்றவாளிகள், அவர்களுக்குரிய அடையாளங்களால் அறிந்து கொள்ளப்பட்டு, முன் உச்சி முடிகளாலும், பாதங்களாலும் பிடிக்கப்படுவார்கள்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- குற்றவாளிகள் மறுத்து வந்த நரகம் இதுவே.
- அதற்கும் மிக அதிகமாகக் கொதிக்கும் நீருக்கு இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்14.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? ரு2
- ஆனால் தமது இறைவனின் உன்னத தோற்றத்திற்கு அஞ்சி நிற்போருக்கு (இவ்வுலகிலும், மறுஉலகிலும்) இரு தோட்டங்கள் உள்ளன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- (இரு தோட்டங்களும்) கிளைகள் பரவியதாக இருக்கும்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவ்விரண்டிலும் தாராளமாக ஓடிக் கொண்டிருக்கும் இரு நீரூற்றுக்கள் உள்ளன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவ்விரண்டிலும் ஒவ்வொரு (வகைப்) பழமும் இரட்டையாக இருக்கும்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவர்கள் விரிப்புகளின் மேல் (மஞ்சங்களில்) சாய்ந்தவர்களாக அமர்ந்திருப்பார்கள். அவற்றின் உள் அமைப்புகள் தடித்த பட்டுத் துணியால் ஆனது. அவ்விரு தோட்டங்களிலுள்ள கனிந்த பழங்கள் அருகில் இருக்கும்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவற்றில் அடக்கமான பார்வையுடைய (தூய) பெண்கள்15 இருப்பார்கள். அவர்களை மனிதரோ, ஜின்னோ இவர்களுக்கு முன் தொட்டிருக்க மாட்டார்கள்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவர்கள் மாணிக்கங்களையும், சிறிய முத்துக்களையும் போன்றவர்கள்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- நன்மைக்கு ஈடு நன்மையேயன்றி வேறுண்டா?
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவ்விரண்டுமன்றி இன்னும் (வேறு) இரு தோட்டங்கள் உள்ளன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- (இவ்விரு தோட்டங்களும்) மிக்க பசுமையானவையாகும்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- இவ்விரண்டிலும் நன்றாகப் பீறிட்டு வரும் இரு நீரூற்றுக்கள் உள்ளன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- இவ்விரண்டிலும் (எல்லா வகைப்) பழங்களும், பேரீச்சைகளும், மாதுளைகளும் உள்ளன.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அத் தோட்டங்களில் நல்லவர்களும், அழகானவர்களும் (ஆகிய பெண்கள்) உள்ளனர்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவர்கள் கூடாரங்களில், நன்கு பாதுகாக்கப்பட்ட, கருமை நிறக் கண்களைக் கொண்ட அழகிய பெண்களாவர்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- இவர்களுக்கு முன்னர் மனிதரோ, ஜின்னோ எவரும் அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- அவர்கள் பச்சை நிற மெத்தைகளிலும், அழகிய விரிப்புகளிலும் சாய்ந்தவர்களாக அமர்ந்திருப்பர்.
- எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
- புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் பெயர் மிக்க அருளுக்குரியதாகும். ரு3