அதிகாரம் : அல் ஹுமஸா
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 10
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- புறங்கூறுபவனும் அவதூறு கூறுபவனுமாகிய ஒவ்வொருவனுக்கும் அழிவுதான்.
- அத்தகையவன் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அவ்வப்போது கணக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றான்.
- தன் செல்வம் தன் (பெயரி)னை நிலைத்திருக்கச் செய்யும் என்று அவன் நினைக்கின்றான்.
- ஒருபோதும் அவ்வாறன்று, மாறாக அவன் நிச்சியமாக தூள் தூளாக ஆக்கக்கூடிய தண்டனையில் எரியப்படுவான்.
- தூள்துளாக ஆக்ககூடிய தண்டனையென்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- அது அல்லாஹ்வால் எரியச்செய்யப்பட்ட நெருப்பாகும்.
- அது உள்ளங்களில் பாய்ந்து செல்லும்.
- அது அவர்களை சுற்றி அடைக்கப்பட்டிருக்கும்.
- நீளமான தூண்களில் (அவர்கள்) பிணைக்கப்பட்டிருப்பர். ரு1