அதிகாரம் : அல் மாஊன்
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 8
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- மார்க்கத்தைப் பொய்படுத்துபவனை நீர் அறிந்து கொண்டீரா?
- அவனே அநாதையை விரட்டுகின்றவன்.
- மேலும் ஏழைக்கு உணவளிக்குமாறு அவன் தூண்டுவதில்லை.
- தொழக்கூடிய அவர்கள் மீது அழிவுதான்.
- அவர்கள் தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாகத் தொழுதனர்.
- (மக்களுக்குக்) காட்டவே அத்தகையோர் விருமபுகின்றனர்.
- அவர்கள் அற்ப நன்மைக்குரிய செயல்களைக் கூட தடுத்து விடுகின்றனர். ரு1