அதிகாரம் : அல் ஆதியாத்
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 12
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- மூச்சுத்திணர போர்க்குதிரைகளை ஒட்டிச்செல்லும் கூட்டத்தை நான் சான்றாக காட்டுகின்றேன்.
- தீப்பொறிகளை வெளிப்படுத்துகின்ற குதிரை வீரர்களையும்.
- பின்னர் விடியற்காலையில் (எதிரிகள்) பாய்ந்து செல்பவர்களையும்.
- அதன் மூலம் புழுதி மேகங்களைக் கிளப்புபவர்களையும்.
- அதன் மூலம் (எதிரிகளின்) படைகளுக்கு நடுவில் ஊடுருவிச் செல்பவர்களையும் சான்றாகாக் காட்டுகிறேன்.
- நிச்சியமாக மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாக இருக்கின்றான்.
- நிச்சியமாக அவன் (தனது) சொல், செயலால்) அதற்குச் சாட்சி பகற்கின்றன.
- நிச்சியமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் தீவிரப் பற்றுள்ளவனாக இருக்கின்றான்.
- கல்லறைகளிலுள்ளவர்கள் அறிவதில்லையா? (அவர்கள்) எழுப்பப்பட்டு
- நெஞ்சங்களிலுள்ளது பிரித்தெடுக்கப்படும்போது,
- நிச்சியமாக அவர்களின் இறைவன் அந்த நாளில் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருப்பான். ரு1