அதிகாரம் : அல் காரிஆ
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 12
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (உலகில்) பெருந்துன்பம் ஒன்று (வரவிருக்கிறது).
- அப்பெருந்துன்பமென்பது என்ன?
- மேலும் பெருந்துன்பமென்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- அந்நாளில் மக்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களை போன்று ஆகிவிடுவார்கள்.
- மலைகள் அடித்துச் சிக்கெடுக்கப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
- பின்னர் எவரது (செயல்களின்) எடைகள் கனமானவையாக உள்ளனவோ.
- அவர் திருப்திகரமான வாழ்வைப் பெறுவார்.
- ஆனால் எவரது (செயல்களின்) எடைகள் குறைந்தவையாக உள்ளனவோ,
- நரகம் அவருக்குத் தாயாகி (அவரது தங்குமிடமாகி) விடும்.
- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- அது ஒரு சுடர்விட்டெரியும் நெருப்பாகும். ரு1