அதிகாரம் : அத்தக்காஸுர்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 9

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. (உலகப் பொருள்களை) கூட்டுவதற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுதல், உங்கள் கவனத்தைத் திருப்புகிறது.
  3. நீங்கள் கல்லறைகளைச் சென்றடையும் வரை.
  4. அது மட்டுமன்று (குர்ஆனில் விளக்கப்பட்ட உண்மையினை) நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
  5. (நீங்கள் நினைப்படைப் போன்று) அன்று மீண்டும் நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
  6. (உண்மை நீங்கள் நினைப்பது போன்று) ஒருபோதும் இல்லை. அந்தோ! உறுதியான ஞானத்துடன் நீங்கள் அதனை அறிந்திருந்தால்!
  7. நிச்சியமாக நீங்கள் (இவ்வுலக வாழ்விலேயே) நரகத்தைக் கண்டிருப்பீர்கள்.
  8. பின்னர், நிச்சியமாக நீங்கள் (மறுமையில்) உறுதியான கண்ணால் காண்பீர்கள்.
  9. பின்னர், அந்நாளில் (உலக) அருட்கொடை குறித்து (நீங்கள் அவற்றிற்காக குறித்து (நீங்கள் அவற்றிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினீர்களா இல்லையா என்று) உங்களிடம் கெட்கப்படும். ரு1
Powered by Blogger.