அதிகாரம் : அல் குறைஷ்
அருளப்பட்ட இடம் :
மக்கா | வசனங்கள் : 5
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- குறைஷியரின் பற்றுதலுக்காக.
- குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் அவர்களின் பயணத்தில் (மக்காவுடன்) பற்றுதலுடனிருக்க (நாம் அவ்வாறு செய்தோம்)
- எனவே இந்த வீட்டிற்குரிய இறைவனை அவர்கள் வணங்கவேண்டும்.
- அவன் அவர்களுக்கு பசி(யின் வேளையி)ல் உணவளித்தான். மேலும் அச்சத்தி(ன் வேளையி)ல் பாதுகாப்பளித்தான். ரு1