அதிகாரம் : அல் ஃபீல்
அருளப்பட்ட இடம் :
மக்கா | வசனங்கள் : 6
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- உமது இறைவன் யானைப் படையினர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?1
- அவன் அவர்களின் திட்டத்தைத் தோல்வியடையச் செய்யவில்லையா?
- மேலும் அவன் அவர்கள் (பிணங்கள்) மேல் கூட்டம் கூட்டமாக பறவைகளை அனுப்பினான்.
- அவை (இறந்து அழுகிப்போன) அவர்(களின் இறைச்சி)களைக் களிமண் கற்களின்மேல் அடித்துக் கொண்ட(வாறு தின்ற)ன.
- இவ்வாறு அவன் அவர்களை, தின்றுவிட்ட வைக்கோல்களைப்போல் ஆக்கிவிட்டான். ரூ1