அதிகாரம் : அல் காஃபிரூன்
அருளப்பட்ட இடம் : மக்கா
| வசனங்கள் : 7
பிரிவு : 1
- அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
- (நாம் எக்கால முஸ்லிம்களிடமும் கூறுகிறோம்) நீர் (உம் காலத்து நிராகரிப் போரிடம்) கூறுவீராக: நிராகரிப்பவர்களே! கேளுங்கள்!
- நீங்கள் வணங்குவதைப் போல் நான் வணங்குவதில்லை.
- நான் வணங்குவதைப் போல் நீங்கள் வணங்குவதில்லை.
- மேலும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குவதில்லை.
- நான் வணங்குகிறவனை நீங்களும் வணங்குவதில்லை.
- (ஏனெனில்) உங்கள் மார்க்கம் உங்களுக்கு (ஒரு வழிமுறையினையு)ம். என் மார்க்கம் எனக்கு (ஒரு வழிமுறையினையு)ம் (ஏற்படுத்தி) உள்ளது. ரு1