அதிகாரம்: அத்தாரிக்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 18
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வானத்தையும், இரவில் வருபவரையும் சான்றாகக் காட்டுகிறேன்.
- இரவில் வருபவர் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
- அது ஊடுறுவிச் செல்லும் ஒளியைக் கொண்ட நட்சத்திரமாகும்.
- தன்மீது பாதுகாவலர் நியமிக்கப்படாத எந்த உயிரும் இல்லை.
- தான் எதிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை மனிதன் (ஆழ்ந்து சிந்தித்துப்) பார்க்க வேண்டும்.
- குதித்து வரும் திரவத்திலிருந்து அவன் படைக்கப்பட்டுள்ளான்.
- அது இடுப்புகளுக்கும், மார்பெலும்புகளுக்குமிடையிலிருந்து வெளியாகின்றது.
- நிச்சயமாக, (இறைவனாகிய) அவன், அவனை (வாழ்விற்கு)த் திரும்பச் செய்ய ஆற்றல் பெற்றவனாவான்.
- அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
- பின்னர் அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது; மேலும் உதவி செய்பவர் எவரும் இருக்க மாட்டார்.
- மீண்டும், மீண்டும் மழையைக் கொட்டுகின்ற மேகத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்.
- (புற்பூண்டுகள் முளைக்க) வெடித்து விடுகின்ற பூமியையும் சான்றாகக் காட்டுகிறேன்.
- நிச்சயமாக(க் குர்ஆனாகிய) இது முடிவான வசனமாகும்1.
- நிச்சயமாக இது (பயனற்ற) வீண் பேச்சு அல்ல.
- நிச்சயமாக அவர்கள் ஒரு (சதித்)திட்டம் தீட்டுகின்றனர்;
- நானும் ஒரு திட்டம் தீட்டுகிறேன்.
- எனவே நீர் நிராகரிப்பவர்களுக்குக் காலக்கெடு அளிப்பீராக2; ஆம்; சிறிது காலம், அவர்களுக்குக் காலக்கெடு அளிப்பீராக. ரு1