88- அல் காஷியா


அதிகாரம்: அல் காஷியா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 27
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. சூழ்ந்து கொள்ளக்கூடிய (பேராபத்)தைப் பற்றிய செய்தி உம்மிடம் வந்துள்ளதா?
  3. அந்நாளில் சில முகங்கள் வருத்தத்தால் வாடியவையாக இருக்கும்1.
  4. (அவர்கள்) கடினமாக வேலை செய்து, களைத்துச் சோர்வடைந்து கொண்டிருப்பர்.
  5. (ஆனால் அவர்களின் முயற்சிக்கு எப்பயனும் கிடைக்காது) அவர்கள் சுடர் விட்டெரியும் நெருப்பில் நுழைவர்.
  6. கொதிக்கும் நீரூற்றிலிருந்து அவர்கள் அருந்துமாறு கொடுக்கப்படும்.
  7. கசப்பானதும், முட்கள் நிறைந்ததுமான உலர்ந்த புற்பூண்டைத் தவிர, வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
  8. அது (அவர்களை) வளர்க்காது; பசியையும் தீர்க்காது.
  9. அந்நாளில் சில முகங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தவையாக இருக்கும்;
  10. தங்களுடைய (சென்ற காலக்) கடினமான முயற்சியினால் மிகவும் திருப்தியடைந்திருப்பர்.
  11. உயர்வான தோட்டத்தில் (தங்கி) இருப்பர்.
  12. நீர் அதில் எந்த வீண் பேச்சையும் கேட்க மாட்டீர்.
  13. அதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீரூற்று இருக்கும்.
  14. அதில் உயர்வான மஞ்சங்களும் இருக்கும்.
  15. கோப்பைகள் சரியாக வைக்கப்பட்டிருக்கும்.
  16. சாய்ந்து கொள்வதற்காகத் தலையணைகள் வரிசையாக(வும், அழகாகவும்) வைக்கப்பட்டிருக்கும்.
  17. விரிப்புகள் (நேர்த்தியாக) விரிக்கப்பட்டிருக்கும்.
  18. அவர்கள் மேகங்களை2, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளனவென்றும் பார்ப்பதில்லையா?
  19. வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதென்றும்3,
  20. மலைகளை, அவை எவ்வாறு நாட்டப்பட்டுள்ளனவென்றும்4,
  21. பூமியையும், அது எவ்வாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளதென்பதையும்5 (அவர்கள் பார்ப்பதில்லையா?)
  22. எனவே நீர் அறிவுரை கூறுவீராக; ஏனென்றால், நீர் அறிவுரை கூறுபவரேயாவீர்;
  23. நீர் அவர்களின் காவலராக நியமிக்கப்பட்டவர் அல்ல.
  24. ஆனால் எவர் புறக்கணித்து, நிராகரிக்கின்றாரோ,
  25. அவருக்கு அல்லாஹ் மாபெரும் தண்டனையை வழங்குவான்.
  26. நிச்சயமாக, அவர்கள் எம்மிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது.
  27. பின்னர் அவர்களிடம் கேள்வி, கணக்குக் கேட்பதும் நிச்சயமாக எம்முடைய வேலையேயாகும். ரு1
Powered by Blogger.