அதிகாரம்: அல் ளுஹா
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 12
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- முற்பகல் ஒளியை நான் சான்றாகக் காட்டுகிறேன்1.
- இரவை, அது பரவுகின்ற போது நான் சான்றாகக் காட்டுகிறேன்2.
- உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மைக் பற்றி) வெறுப்படையவுமில்லை3.
- முற்பகுதியை விடப் பிற்பகுதி (யின் ஒவ்வொரு காலகட்டமும்) உமக்கு மிகச்சிறந்ததாகும்4.
- உம் இறைவன் விரைவில் உமக்கு (எல்லாம்) வழங்குவான்; மேலும் (அதனால்) நீர் மிகவும் மகிழ்ச்சியடைவீர்5.
- அவன் உம்மை அனாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?
- அவன் உம்மை (உம் சமுதாயத்திடம் கொண்ட அன்பினால் தம்மையே) இழந்தவராகக் கண்டான். எனவே அவன் (உமக்கு அவர்களைத் திருத்தும்) வழியைக் காட்டினான்6.
- அவன் உம்மைப் பெரும் குடும்பத்தையுடையவராகக் கண்டு, செல்வம் நிறைந்தவராக ஆக்கினான்.
- எனவே, அனாதையை நசுக்கி விடாதிருப்பீராக7.
- மேலும் உமது உதவியைக் கோருபவரை நீர் கடிந்து கொள்ளாதிருப்பீராக.
- மேலும் உமது இறைவனது பேரருளைப் பறை சாற்றுவீராக8. ரு1