அதிகாரம்: அலம் நஷ்ரஹ்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நாம் உமக்காக உமது நெஞ்சத்தைத் திறக்கவில்லையா?
- மேலும் உம்மிடமிருந்து, உம் சுமையை நாம் இறக்கி வைத்தோம்;
- அது உமது முதுகை முறித்தே விட்டிருந்தது1,
- மேலும், உமது கீர்த்தியை நாம் உயர்த்தினோம் (அல்லவா?).
- எனவே, நிச்சயமாக ஒவ்வொரு கஷ்டத்துடனும் சுகம் உண்டு.
- (ஆம்!) நிச்சயமாக, ஒவ்வொரு கஷ்டத்துடனும் சுகம் உண்டு.
- எனவே, நீர் (கடமைகளை நிறைவேற்றிய பின்) ஓய்ந்திருக்கையில் கடுமையாக முயல்வீராக2.
- மேலும் அன்போடு உமது இறைவனை நோக்கித் திரும்புவீராக. ரு1