அதிகாரம்: அத்தீன்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அத்திமரம்1, ஆலிவ் மரம்2 ஆகியவற்றை நான் சான்றாகக் காட்டுகிறேன்.
- ஸீனாய் மலையையும்3 (சான்றாகக் காட்டுகிறேன்).
- இந்த அமைதியான நகரத்தையும்4 (சான்றாகக் காட்டுகிறேன்).
- நிச்சயமாக நாம் மனிதனைச் சிறந்த முறையில் படைத்து (எழுப்பியு)ள்ளோம்.
- பின்னர் நாம் அவனைத் தாழ்ந்தவர்களுள் மிகத் தாழ்ந்தவனாக மாற்றினோம்.
- ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர. எனவே இவர்களுக்கு என்றும் முடிவடையாத தூய வெகுமதி உண்டு.
- எனவே இத்தீர்ப்புக்குப் பின்னர் உம்மைப் பொய்ப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது?
- அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோருள் மிகச்சிறந்த தீர்ப்பு வழங்குபவன் இல்லையா? ரு1