அதிகாரம் : அல்-ஃபலக்
அருளப்பட்ட இடம்
: மதீனா | வசனங்கள் : 6
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்.)
- நீர் கூறுவீராக : இயற்கை நியதியின் இறைவனிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
- அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் ,
- இருள் பரவும்போது , அதன் தீங்கிலிருந்தும் ,
- (உறவு தொடர்புகளின்)முடிச்சுகளில் (அவற்றை முறிப்பதற்காக ) ஊதுபவர்களின் தீங்கிலிருந்தும்
- பொறாமைக்காரன், பொறாமை கொள்கின்றபோது ஏற்படுகிற தீங்கிலிருந்தும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.) ரு1