அதிகாரம் : அந்-நாஸ்
அருளப்பட்ட இடம்
: மதீனா | வசனங்கள் : 7
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகின்றேன்.)
- நீர் கூறுவீராக : நான் மனித இனத்தின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
- (அவன்) மனித இனத்தின் மன்னன்.
- (அவன்) மனித இனத்தின் வணக்கத்திற்குரியவன்.
- தீய எண்ணங்களை உருவாக்கி விட்டு ஒதுங்கி கொள்பவனின் தீங்கிலிருந்தும் (நான் பாதுகாப்பு தேடுகிறேன்.)
- (மேலும்) அவன் மக்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை உண்டு பண்ணுகின்றவன் ஆவான்.
- அவன் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளான். ரு1